எவனாகிலும் சிறுபிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அதில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (லூக்கா 18:17)
மிகவும் எளிமையான, பலவீனமானவர்களின் அழுகையை தேவன் கேட்கிறார், மேலும் சிறு பிள்ளைகளின் கோரிக்கைகளைப் போன்ற கோரிக்கைகளை ஏற்றுக் கொள்கிறார். நான் நான்கு குழந்தைகளை வளர்த்துள்ளேன். இப்போது எனக்கு ஒன்பது பேரக்குழந்தைகள் உள்ளனர் – ஆகவே குழந்தைகள் இல்லாத ஒரு விஷயம் எவ்வளவு சிக்கலானது என்று என்னால் சொல்ல முடியும். குழந்தைகள், அவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை, அவர்கள் பயப்படும்போது உங்களை அனைத்துக் கொள்கிறார்கள் அல்லது தாராளமாய் உங்களுக்கு ஒரு பெரிய முத்தம் கொடுக்கிறார்கள். சில நேரங்களில் வெளிப்படையான காரணமின்றி. அவர்கள், தங்கள் பெற்றோரிடம் ஒரு கேள்வியைக் கேட்கும் போது, பதிலைப் பெற வேண்டுமென்று முழுமையாக எதிர்பார்க்கிறார்கள். நாம் தேவனிடம் பேசும் போது, அதே எதிர்பார்ப்பு நமக்கும் இருக்க வேண்டும். குழந்தைகள் தங்கள் இருதயங்களையோ, உணர்வுகளையோ மறைக்கும் அளவுக்கு அதிநவீனமானவர்கள் அல்ல. அதனால், அவர்களுடன் தொடர்பு கொள்வது எளிதாகவும், உற்சாகமாகவும் இருக்கும்.
நாம் அவருடன் பேசும் போதும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். நாம் சிறு பிள்ளைகளைப் போல் எளிமையுடன் கடவுளை அணுக வேண்டும். அவர் நமக்கு என்ன சொல்கிறார் என்பதைக் கேட்க ஆவலுடன் காத்திருக்க வேண்டும். சிறு பிள்ளைகள் இயற்கையாகவே தங்கள் பெற்றோரை முழுமையாக நம்புவதைப் போலவே, தேவனுடைய சத்தத்தை நம்புவதற்கு நாமும் குற்றமற்றவர்களாகவும், தூய்மையானவர்களாகவும், சந்தேகம் இல்லாதவர்களாகவும் இருக்க வேண்டும். எளிமையான, குழந்தைத்தனமான நம்பிக்கையுடன் நாம் ஜெபிக்கும்போது, கடவுளின் அற்புத வல்லமையை நாம் அனுபவிக்க முடியும், மேலும் காரியங்கள் மாறுவதைக் காணலாம்.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: இன்று நீங்கள் ஜெபிக்கும்போது, கடவுளை “அப்பா” என்று அழைத்து, அவரை முழுமையாக நம்புங்கள்.