
யூதா கோத்திரத்தார் அனைவரும், அவர்கள் குழந்தைகளும், அவர்கள் பெண்ஜாதிகளும், அவர்கள் குமாரருங்கூட கர்த்தருக்கு முன்பாக நின்றார்கள். (2 நாளாகமம் 20:13)
இன்றைய வசனத்தில், ஒரு முழு தேசமும் தேவனுக்கு முன்பாக அசையாமல் நின்றது என்று சொல்லியிருப்பது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. தேவனுடைய பொருளாதார கொள்கையில், விசுவாசத்தில் நிலைத்திருப்பதே, செயல் முறையாகும். இது நிச்சயமாக, மாம்சத்திற்குறிய நடவடிக்கை அல்ல; அது ஆவிக்குறிய நடவடிக்கை. பெரும்பாலும் இயற்கையாகவே நம் வாழ்வில், நாம் செயல்படுகிறோம், ஆனால் ஆவிக்குறிய வாழ்வில் சிறிதளவு கூட அப்படி செய்வதில்லை. ஆனால் நாம் அமைதியாக இருக்கவும், கர்த்தருக்காக காத்திருக்கவும் நம்மை ஒழுங்குபடுத்தும் போது, நாம் ஒரு சக்தி வாய்ந்த ஆவிக்குறிய நடவடிக்கையில் ஈடுபடுகிறோம். அப்படி அமைதியாக காத்திருப்பது தேவனிடம் இப்படி கூறுகிறது, “இந்த சூழ்நிலையில் நீர் ஏதாவது செய்யும் வரை நான் உமக்காக காத்திருக்கிறேன். இதற்கிடையில், நான் உமக்காக காத்திருக்கும் போது நான் அமைதியாகவும், என் வாழ்க்கையை அனுபவிக்கவும் போகிறேன்.”
தேவனுக்கு முன்பாக அசையாமல் நின்ற யூதாவின் மக்கள், அசையாமல் நிற்பதைத் தவிர, எதையாவது செய்ய முயலுவதற்கு எல்லா காரணங்களும் இருந்தன. ஒரு பெரும் படை அவர்கள் மீது இறங்கி, அவர்களின் நிலத்தை அழித்து, அவர்களை அடிமைப்படுத்துவதாக அச்சுறுத்துவதை எதிர்கொண்டு, அவர்கள் கிளர்ச்சி செய்ய அல்லது குறைந்தபட்சம் தங்களைத் தற்காத்துக் கொள்ள ஆசைப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை. அவர்கள் வெறுமனே நின்று, கடவுளுக்காக காத்திருந்தனர், அவர் அவர்களை அற்புதமாக விடுவித்தார்.
தேவனுக்காகக் காத்திருப்பது பலத்தைத் தருகிறது (ஏசாயா 40:31ஐப் பார்க்கவும்). தேவன் நமக்கு வழிகாட்டும் போது, அவர் அறிவுறுத்துவதை செய்ய காத்திருக்கும் போது, நாம் பெலனடைகிறோம். கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்கள் அவருடைய சத்தத்தைக் கேட்கிறார்கள், பதிலைப் பெறுகிறார்கள், வழிநடத்துதலைப் பெறுகிறார்கள், அவர் சொல்வதற்கு கீழ்ப்படிவதற்கான பெலனைப் பெறுகிறார்கள்.
இன்று உங்களுக்கான தேவனுடைய வார்த்தை: கர்த்தருக்கு முன்பாக அசையாமல் நிற்பதே, செயல்படும் விசுவாசம்.