அப்பொழுது அவர்: நீ வெளியே வந்து கர்த்தருக்கு முன்பாகப் பர்வதத்தில் நில் என்றார்; அப்பொழுது, இதோ, கர்த்தர் கடந்துபோனார்; கர்த்தருக்கு முன்பாகப் பர்வதங்களைப் பிளக்கிறதும் கன்மலைகளை உடைக்கிறதுமான பலத்த பெருங்காற்று உண்டாயிற்று; ஆனாலும் அந்தக் காற்றிலே கர்த்தர் இருக்கவில்லை; காற்றிற்குப்பின் பூமி அதிர்ச்சி உண்டாயிற்று; பூமி அதிர்ச்சியிலும் கர்த்தர் இருக்கவில்லை.பூமி அதிர்ச்சிக்குப்பின் அக்கினி உண்டாயிற்று; அக்கினியிலும் கர்த்தர் இருக்கவில்லை; அக்கினிக்குப்பின் அமர்ந்த மெல்லியசத்தம் உண்டாயிற்று. (1 இராஜாக்கள் 19:11–12)
சில குதிரைகளுக்கு, பயிற்சியாளர்கள் அழைப்பதைப் போன்று “கட்டுப்படுத்தும் காது” என்று ஒன்று இருப்பதை பல வருடங்களுக்கு முன்பு நான் அறிந்தபோது மிகவும் ஆச்சரியப்பட்டேன். பெரும்பாலான குதிரைகள் வாயில் கட்டப்பட்ட பட்டையால் வழிநடத்தப்பட வேண்டும் என்றாலும், சில குதிரைகள் தங்கள் எஜமானரின் குரலுக்கு ஒரு காதைக் கட்டுப்படுத்துகின்றன. இயற்கை எச்சரிக்கைகளுக்கு ஒரு காது திறந்திருக்கும்; மற்றொன்று நம்பகரமான பயிற்சியாளரிடம் உணர்திறன் கொண்டது.
தீர்க்கதரிசி எலியாவுக்குக் கட்டுப்படுத்தும் காது இருந்தது. இயற்கையான சூழ்நிலைகள் அவர் பயப்படுவதற்கு காரணங்களாக இருந்த போதும், தேவனிடம் இருந்து கேட்க வேண்டிய கட்டாயத்தில் அவர் இருந்த போது, அவரைச் சுற்றியுள்ள இரைச்சல் மற்றும் குழப்பத்துடன் கூட அவரால் தேவன் சொல்வதை தெளிவாக கேட்க முடிந்தது. அவர் 450 பொய்யான தீர்க்கதரிசிகளை அவர்களின் அமைதியான பாகாலுக்கும் ஒரே உண்மையான கடவுளுக்கும் இடையிலான சண்டையில் தோற்கடித்தார். இப்போது பொல்லாத ராணி யேசபேல் ஒரு நாளில் அவரைக் கொன்றுவிடுவதாக மிரட்டினாள். என்ன செய்வது என்று அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும்!
அவர் கடவுளுக்கு முன்பாக ஒரு மலையில் நின்றார். பலத்த காற்று மலைகளைக் கிழித்தது; ஒரு பயங்கரமான நிலநடுக்கம் உண்டாயிற்று; மேலும் அவரைச் சுற்றிலும் தீ பரவியது. நெருப்புக்குப் பிறகு “அமைதியான, சிறிய சத்தம்” வந்தது. எலியாவிற்கு, தேவனுடைய சத்தம் காற்று, நிலநடுக்கம் அல்லது நெருப்பின் சக்தியில் இல்லை, ஆனால் அவருடைய மெல்லிய சத்தத்தில் இருந்தது. எலியாவுக்கு தனது எஜமானிடம் பயிற்றுவிக்கப்பட்ட மற்றும் உணர்திறன் கொண்ட காது இருந்தது, எனவே அவர் கடவுள் சொன்னதைச் செய்தார், அது அவரது உயிரைக் காப்பாற்றியது.
தேவன் இன்றும் நம் இருதயங்களில் மென்மையாகவும், மெல்லிய சத்தத்தோடும் பேசுகிறார். நீங்கள் கேட்கும் காதைக் கொடுக்கும்படி அவரிடம் கேளுங்கள், இதன் மூலம் அவருடைய அமைதியான சிறிய சத்தத்தை நீங்கள் கேட்கலாம்.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: “கேட்கும்” காதுடன் கடவுளைக் கேளுங்கள்.