
“உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.” – யோவாண் 14:17
எல்லாவற்றிற்கும் பொருந்தக்கூடிய சில சத்தியங்கள் வேதத்தில் உள்ளது – அவற்றில் சுய கட்டுப்பாடு ஒன்று. நம் வாழ்வில் நமக்கு என்ன மாதிரியான பிரச்சினை இருந்தாலும் பரவாயில்லை, ஒவ்வொரு பகுதியிலும் சுய கட்டுப்பாடு செயல்படுகிறது. நாம் நம்மை ஒழுங்குபடுத்தாவிட்டால், நம் உணர்ச்சிகள் நம்மை ஆளும், நம் வாழ்க்கை பரிதாபமாக இருக்கும்.
சுய கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பது என்பது மிதமான முறையில் வாழ்வது என்று பொருள். நம் வாழ்க்கையில் உள்ள எல்லாவற்றிற்கும் தரமான கட்டுப்பாடும், ஒழுக்கமும் தேவை. நம் பிரச்சினைகள் பல ஒழுக்கமின்மையின் நேரடி விளைவாகும். நமது செலவு பழக்கத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியாத போது நிதிக் சுமை ஏற்படுகிறது. நம்முடைய உணவுப் பழக்கத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியாதபோது ஆரோக்கிய குறைவு வருகிறது.
நீங்கள் மேற்கொள்ள முடியாத அளவுக்கு தோன்றும் சூழ்நிலையில் இருந்தால், நிறைய ஒழுக்கம் மற்றும் சுய கட்டுப்பாடு தேவைப்படலாம். தேவன் நம்மில் வாழவும் நமக்கு உதவவும் பரிசுத்த ஆவியானவரைக் கொடுத்திருக்கிறார்.
நீங்கள் மீண்டும் பிறந்திருக்கிறீர்கள் என்றால், உங்களுக்குள் கிறிஸ்துவின் ஆவியானவர் இருக்கிறார். அதை நீங்கள் வளர்த்திருக்காமல் இருக்கலாம். ஆனால் அது அங்கே இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு எது வேண்டுமோ அதைப் பெற்றிருக்கிறீர்கள். பரிசுத்த ஆவியானவருடனான உங்கள் உறவின் மூலம் சுய கட்டுப்பாட்டை வளர்த்துக் கொள்ளுங்கள்.
ஜெபம்
தேவனே, ஒழுக்கம் மற்றும் சுய கட்டுப்பாட்டின் பலனை எனக்கு வழங்கியதற்கு நன்றி. என்னில் உமது ஆவியின் வல்லமையால், நீர் என்ன செய்யச் சொல்கிறீர்களோ அதைச் செய்வேன். என் உணர்வுகளால் கட்டுப்படுத்தப்பட மாட்டேன்.