
“நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய் தரித்திருங்கள்.” – ரோமர் 12:12
கிறிஸ்தவர்களாக நம்மில் அநேகருக்கு, நாம் கிறிஸ்தவர்களாக இருப்பதால் நம் வாழ்வில் எல்லாம் பரிபூரணமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் இயேசு தெளிவாக…. உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம், சோதனைகள், கஷ்டங்கள், விரக்தி எல்லாம் வரும் என்று எச்சரிக்கிறார் (யோவான் 16:33).
நாம் உலகப்பிரகாரமான உபத்திரவங்களை சமாளிக்க வேண்டும் என்று இயேசு சொன்னார். நாம் அவரை பின்பற்றுவதற்காக சுயநலமான ஆசாபாசங்களை விட்டு விடும் போது, இந்தக் காரியங்கள் எல்லாம் நம் வாழ்க்கையின் பங்காக இருக்கிறது.
அப்போஸ்தலர் பவுல் ஒரு விளையாட்டு வீரனைப் போன்று, குத்துச் சண்டை வீரனைப் போன்று நான் என் சரீரத்தை கடினமாக கையாண்டு, கடினங்களால் கட்டுப்படுத்தி அதை அடக்குகிறார் என்கிறார் (1 கொரிந்தியர் 9:27).
பவுல் இங்கே சுய கட்டுப்பாட்டை பற்றி பேசுகின்றார். சுய கட்டுப்பாட்டுடன் இருப்பதாவது, நம்முடைய பாவகரமான ஆசைகளை விட்டு விட்டு சரியான காரியங்களை தேவனுடைய கிருபையினாலே கிரயம் என்னவாயிருக்கும் செய்வதாகும்.
அது எப்போதுமே சுலபமானதாக இருப்பதில்லை. சுயத்திற்கு மரிப்பதென்பது நிச்சயமாக கஷ்டங்களை ஏற்படுத்தும். ஆனால் கஷ்டங்களின் மத்தியிலும் நமக்கு நம்பிக்கை உண்டு என்பதை நினைத்து கொள்ளுங்கள். ஏனென்றால் கிறிஸ்து உலகத்தை ஜெயித்து இருக்கிறார். பவுலும் நாம் சந்தோசமாக, நம்பிக்கையிலே களிகூறலாம், துன்பத்திலும் பொறுமையாக இருங்கள், ஜெபத்திலே உறுதியாய் தரித்திருங்கள் என்று கூறுகிறார்.
ஜெபம்
தேவனே, என் மாம்சம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் முன்னேற்பாடாக உம்மை பிரியப்படுத்த தீர்மாணிக்கிறேன். உம்முடைய சித்தத்தை செய்ய நான் உபத்திரவ பட வேண்டி இருந்தாலும், நீர் உலகத்தை மேற்கொண்டதாலும், உம் ஆவி எனக்குள்ளே இருப்பதாலும், நம்பிக்கை இருக்கிறது என்பதை அறிந்திருக்கிறேன்.