நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார். – யோவாண் 13:35
கிறிஸ்தவர்களாக நாம் பிறருக்கு அன்பை காட்ட அழைக்கப்பட்டிருக்கிறோம். மேலே உள்ள வசனம் சொல்வதைப் போன்று, மற்றவர்கள் நாம் இயேசுவின் சீஷர்கள் என்று அறிந்து கொள்வார்கள் (நாம் ஒருவரையொருவர் நேசிக்கும் போது, அன்பை தொடர்ந்து காண்பித்து கொண்டேன் இருப்போம் என்றால்). யோவாண் 13:35.
அனேகர் அன்பை ஒரு உணர்ச்சியாக பார்க்கின்றனர். ஆனால் அது அதைவிட மேலானது. உண்மையான அன்பு நம் செயல்பாடுகளில் வெளிப்படுகின்றது.
இந்த செயல்பாடுகள் எல்லாம் முடியாதவைகளாகவும், மேற்கொள்ள கூடியவைகளாகவும் இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. இயேசுவின் அன்பை காட்டும் சிறந்த வழிகளில் ஒன்று எளிமையான, அனுதின செயல்கள் தான்.
ஒருவருக்கு ஒரு சிறிய பரிசு அளிப்பதன் மூலமுமோ அல்லது சோர்வுற்ற ஒரு நண்பருடன் கலந்துரையாடுவது போன்றோ அல்லது கணவன் விட்டு விட்டு சென்று விட்டதால், உணவுக்கே போராடிக் கொண்டிருக்கும் ஒரு தாய்க்கு மளிகை பொருட்களை வாங்கிக் கொடுப்பதாகவும் கூட இருக்கலாம்.
அன்பை காட்டுவது புன்சிரிப்பு போன்றோ அல்லது தெருவிலோ, கடையிலோ கடந்து சென்று கொண்டிருக்கும்போது ஒருவரிடம் ஹலோ சொல்வதை போன்று எளிமையானதாக இருக்கலாம்.
கிறிஸ்துவின் அன்பை காட்ட அனேக வழிகள் உண்டு. நீங்கள் ஒருவருக்கு அன்பை காட்டும் போது அது அந்த நபரின் இருதயத்தை இளக செய்யும். நீங்கள் அதை உணரும் முன்பு அவர்கள் பிறரிடம், பிறருக்கு அன்பை காட்டி கொண்டிருப்பார்கள்!
எனவே தேவனுடைய அன்பை கொண்டாடுங்கள். அவர் உங்களை நடத்த அனுமதியுங்கள். உங்கள் இருதயத்தில் அவர் இப்போது ஒருவரை காட்டுகின்றாரா?
இயேசுவின் மேல் இருக்கும் என் அன்பு நான் பிறரிடம் காட்டும் அன்பிலே வெளிப்பட வேண்டும் என்று விரும்புகிறேன் – நேசிக்க கடினமாய் இருப்பவர்களிடம் கூட. தேவனுடைய அன்பால் நான் ஒரு கடினமான இருதயத்தை இளகுவாக்க முடியும் என்றால், அவர் வேறொருவரின் இருதயத்தை அன்பால் இளகுவாக்குவார். பின்னர் அவர் வேறு ஒருவரிடம் அன்பை காட்டுவார். அப்போது தேவனுடைய அன்பு தொடர்ந்து கொண்டே இருக்கும்…. சீக்கிரத்தில் ஒரு அன்பின் புரட்சியை கொண்டிருப்போம்!
ஜெபம்
உம் மேல் இருக்கும் என் அன்பு மற்றவர் மேல் நான் காட்டும் அன்பிலே வெளிப்பட விரும்புகிறேன். என் வழியில் நீர் கொண்டு வரும் எவரிடமும், எல்லோரிடமும் அன்பை காட்டும் வழியை எனக்கு காண்பித்தருளும்.