“மனுஷனுடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும்; அவனுடைய நடைகளை உறுதிப்படுத்துகிறவரோ கர்த்தர்.” – நீதி 16:9
மக்கள் அடிக்கடி என்னிடம், அவர்களின் வாழ்க்கைக்கான தேவனுடைய சித்தத்தை எப்படி கண்டுபிடிப்பது என்று கேட்பார்கள். சிலர் பல வருடங்களாக தேவனிடமிருந்து சத்தத்தைக் கேட்கவோ அல்லது இயற்கைக்கப்பாற்பட்ட வழி நடத்துதலைப் பெற்றுக் கொள்ளவோ காத்திருக்கின்றனர். ஆனால் உங்கள் இருதயங்களிலே தேவனுடைய சத்தத்தைக் கேட்பது, அதை விட அதிக நடைமுறைக்கேற்றதாக இருக்கின்றது. நான் அவர்களிடம் செய்து கண்டுபிடிக்கும் படி சொல்வதுண்டு.
தேவனுடனான என் பிரயாணத்தின் ஆரம்ப கட்டத்திலே அவரை சேவிக்க விரும்பினேன். என் வாழ்க்கையிலே ஒரு அழைப்பு இருப்பதாக உணர்ந்தேன். ஆனால் என்ன செய்ய வேண்டுமென்று எனக்கு தெரியவில்லை. எனவே எனக்கு கிடைத்த பல்வேறு வாய்ப்புகளை முயற்சித்தேன்.
அவற்றில் அனேகம் எனக்கு தகுதியாக இருக்கவில்லை. ஆனால் எனக்கு தகுதியானதை கண்டு பிடிக்கும் வரை பல்வேறு காரியங்களை முயற்சித்தேன். இறுதியாக, தேவனுடைய வார்த்தையைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு வாய்ப்பு கிட்டிய போது நான் எனக்குள்ளே ஏதோவொன்று உயிர் பெற்றதைப் போல உணர்ந்தேன். கற்றுக் கொடுப்பதில் / போதிப்பதில் சந்தோசத்தைக் கண்டேன். அதை செய்ய தேவன் எனக்கு திறனைக் கொடுத்திருந்தார். அப்போது ஊழியத்தில் என் இடத்தை கண்டு பிடித்து விட்டேன் என்று எண்ணிக் கொண்டேன்.
சில சமயங்களிலே தேவனுடைய சித்தத்தைக் கண்டுபிடிக்க ஒரே வழி ‘செய்து கண்டுபிடிப்பதேயாகும்’. ஒரு சூழ்னிலையைப் பற்றி நீங்கள் ஜெபித்திருந்தும் என செய்ய வேண்டுமென்று நீங்கள் அறியாதிருக்கும் பொழுது விசுவாச அடியெடுத்து வையுங்கள். தவறு செய்து விடுவோமென்று பயப்படாதீர். செய்யத் தொடங்குங்கள், தேவன் உங்களை வழி நடத்துவார்.
ஜெபம்
தேவனே, நான் உம்மை நம்புகிறேன். நீர் என் பாதைகளை நடத்துவீரென்று அறிந்திருக்கிறேன். எனவே நீர் எனக்காக என்ன வைத்திருக்கிறீர் என்பதை செய்து கண்டுபிடிக்க, பயப்பட மாட்டேன்.