
என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார். – யோவான் 16:33
ஒரு அமைதியான, சமாதானமான மனப்பான்மையை கொண்டிருப்பது விலையேறப் பெற்றது. ‘நான் தேவனை நம்புகிறேன்’ என்று சொல்லக்கூடிய மனப்பான்மை அது. அது மக்களிடம் வல்லமையாக பேசக் கூடியது. ஆனால் அப்படியாக தொடர்ந்து சமாதானமாக இருக்க நேரம், கவனம், தேவ கிருபை தேவைப்படுகிறது.
அனேக தருணங்களில் நம் மன அழுத்த அளவானது நம் சூழ்நிலையை பொருத்து இருக்கிறது. நீங்கள் எப்போதுமே அலுவலாக இருப்பதாலோ, பண ரீதியாக கஷ்டப்படுவதாலோ அல்லது நீங்கள் நேசிப்பவரோடு இணக்கமாக செல்லாமல் இருப்பதாலோ மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருக்கலாம்.
நம் வாழ்விலே இருக்கும் மன அழுத்தத்தை மேற்கொள்ள இயேசுவின் மேற்கொள்ளும் வல்லமையால் நமக்கு கிடைக்கும் சமாதானத்தை அப்பியாசபடுத்த கற்றுக்கொள்ள வேண்டும்.
தொடர்ச்சியான சமாதானத்தை வளர்க்கும் ஒரு வழி ‘இப்போது’- லே வாழ கற்றுக்கொள்ள வேண்டும். நாம் கடந்த காலத்தை பற்றி யோசித்தும், எதிர்காலம் எப்படி இருக்குமோ என்று அதிகமாக சிந்தித்துக் கொண்டிருக்கலாம்… ஆனால் நம் மனம் இன்றிலே கவனம் செலுத்தாவிட்டால் நாம் எதையுமே சாதிக்க இயலாது.
நாம் வாழும் ஒவ்வொரு நாளைக்கும் தேவையான கிருபையை தேவன் கொடுக்கிறார் என்று வேதம் சொல்லுகிறது. நாம் செய்ய வேண்டியதை செய்வதற்கு நம்மை பலப்படுத்தும் வல்லமையே தேவனுடைய கிருபை என்று நம்புகிறேன். நமக்கு தேவைப்படும் அளவு அவர் அதை தாராளமாக கொடுக்கிறார்.
நான் ஒவ்வொரு நாளும் ‘தேவன் எனக்கு இந்த நாளை கொடுத்திருக்கிறார். நான் அதிலே சந்தோஷப்பட்டு களி கூறுவேன்’. நீங்கள் தேவனை ‘இந்த சமயத்தில்’ நம்ப கற்றுக்கொள்ள இயலும் என்றால் உங்களுக்கு தேவைப்படும் அளவு அவரது கிருபையை பெற்றுக்கொள்வீர்கள் என்றால் நீங்கள் நிச்சயமாகவே சமாதானம் உள்ளவராக மாற இயலும். அது மிகவும் வல்லமையானது.
ஜெபம்
நீர் எல்லாவிதமான தடையையும் மேற்கொண்டிருக்கிறீர் என்று அறிவேன். எனவே நீர் எனக்கு கொடுக்கும் சமாதானத்தில் நான் வாழ எனக்கு உதவுவீராக. நான் ‘இன்றிலே’ வாழ்வதிலே, உம்மை எப்படி நம்புவது என்பதை எனக்கு காட்டியருளும்.