“நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலது கை செய்கிறதை உன் இடது கை அறியாதிருக்கக்கடவது.” – மத் 6:3
தியாகி என்றால் என்ன என்பதை நாம் அனைவரும் அறிவோம். கிறிஸ்துவுக்காக மரித்த, வீரர் மற்றும் வீராங்கணைகளைப் பற்றிய உள்ளத்தை உருக்கும் கதைகளை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் தைரியமாக மற்றும் உன்னதமாக இல்லாத மற்றொரு வகையான தியாகி இருக்கிறார் – அவர் கேட்கும் எவருடனும் தன் வலியை எப்போதும் பகிர்ந்து கொள்ள தயாராக இருப்பவர். இப்படிப்பட்ட தியாகிகள் தங்கள் வாழ்க்கையில் அவர்கள் எப்படிப்பட்ட தியாகங்களைச் செய்கிறார்கள் என்பதை அனைவரும் அறிய விரும்புகிறார்கள்.
இந்த “தியாகி வலையில்” விழுவது மிகவும் எளிதானது. நாம் நம்முடைய குடும்பத்தையும், நண்பர்களையும் சேவிக்கிறோம், அப்படி இருப்பதை விரும்புகிறோம். ஆனால் சிறிது காலத்திற்குப் பிறகு, நம் இருதயம் மாறத் தொடங்குகிறது. பதிலுக்கு ஏதாவது எதிர்பார்க்க ஆரம்பிக்கிறோம். இறுதியில், ஒரு ஊழியரின் இருதயம் நமக்கு இருப்பதில்லை. நம் மனப்பாண்மை கசக்கிறது. நாம் சுய பரிதாபத்தில் மூழ்கி விடுகின்றோம் என்பதை விரைவில் கண்டுபிடிப்போம். நாம் ஒரு தியாகியாகி விட்டோம்.
உங்கள் வலது கை கொடுப்பதை உங்கள் இடது கைக்கு தெரியப்படுத்தாமல் கொடுக்க வேதம் சொல்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மக்கள் நம்மை கவனிக்கிறார்களா அல்லது அங்கீகரிக்கிறார்களா என்பதைப் பற்றி நாம் கவலை கொள்ளாமல், சேவிக்க வேண்டுமென்று தேவன் விரும்புகிறார்.
நீங்கள் “தியாகி வலையில்” விழுந்து விட்டீர்களா? அப்படியானால், நீங்கள் அங்கீகாரத்தைப் பற்றிய கவலை இல்லாமல், தன்னலமின்றி கொடுக்கும் இருதயத்தை அவர் உங்களுக்குத் தரும்படி கேளுங்கள்.
ஜெபம்
பரிசுத்த ஆவியானவரே, நான் தியாகி வலையில் விழுந்திருந்தால் அதை எனக்குக் காட்டும். சேவை செய்யும் உம்முடைய இருதயத்தை நான் கொண்டிருக்க விரும்புகிறேன், எனவே மற்றவர்களுக்கு நீர் என்னை விரும்பும் விதத்தில், தன்னலமின்றி, உம்முடைய மகிழ்ச்சியுடன் கொடுக்க முடியும்.