“மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?” – மத் 16:26
நாம் ஒரு தாழ்ந்த வாழ்க்கையை வாழ, சாத்தான் நம்மைத் தூண்டுகிறான். ஆனால் நம் தேவனோ உயர்ந்த வாழ்க்கை வாழ நம்மைத் தூண்டுகிறார். நாம் செய்யக் கூடிய மிக மோசமான தவறுகளில் ஒன்று, மனநிறைவைப் பெறுவது. இப்போது நம்மிடம் இருப்பது போதும் அல்லது நம்மால் இயன்ற சிறந்தது இதுதான் என்று நினைப்பதாகும். குறைந்த எதிர்பார்ப்பு கொண்டிருக்கும் மனநிலை நம்மைத் தடுத்து நிறுத்துகிறது. ஏனென்றால் தேவன், நம்மைக் கொண்டு என்ன செய்ய முடியும் என்று நம்புகிறாரோ அதை மட்டுமே நம்மூலம் செய்வார்.
ஆவிக்குறிய ரீதியில் நாம் “இது போதும்” என்ற இடத்திற்குள் இருப்பதைப் பற்றி எச்சரிக்கையாயிருங்கள். நான் சராசரியாக இருக்க விரும்பவில்லை, ஏனென்றால் நான் ஒரு சராசரி கடவுளை சேவிக்கவில்லை. தேவன் சிறந்தவைகளின் தேவன், அவருடைய முன் மாதிரியைப் பின்பற்ற நான் விரும்புகிறேன். மேலே உள்ள வசனம் சொல்வது போல், இந்த உலகம் நமக்கு கொடுக்கும் அனைத்தையும் நாம் சம்பாரித்துக் கொண்டிருக்கும் போது, அவர் நமக்காக வைத்திருக்கும் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையை இழக்க நேரிடும்.
குறைந்த வாழ்க்கைக்கு அதிக கட்டணம் உண்டு. இந்த உலகில் கிறிஸ்துவுக்குள் நமக்கிருக்கும் அற்புதமான, சமாதானமான, மகிழ்ச்சியான, நீதியான, பரிசுத்தமான வாழ்க்கையை விட்டு விடும் அளவிற்கு தகுந்ததாக எதுவும் இருக்கிறதில்லை. கடவுளின் விருப்பத்தை எதிர்த்து, உங்கள் வழியில் வாழ்ந்தால், நீங்கள் குறைந்த வாழ்க்கையை வாழ்கிறீர்கள்.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார், ஆனால் அதை நீங்களே உங்களுக்கு கொடுக்க முயற்சிப்பதை அவர் விரும்பவில்லை. நீங்கள் பொருட்களைத் தேடுவதையோ அல்லது அவருக்கு முன்னால் பொருட்களை வைப்பதையோ அவர் விரும்பவில்லை. நாம் தேவனையும் அவருடைய ராஜ்யத்தையும் முதலாவது தேடும் போது, அவர் நமக்காக வைத்திருக்கும் எல்லா ஆசீர்வாதங்களும் நமக்கு கிடைக்கும். அதுதான் உயர்ந்த வாழ்க்கையை வாழ்வதாகும்!
ஜெபம்
ஆண்டவரே, நான் குறைந்த வாழ்க்கையில் நின்று விட விரும்பவில்லை. உம்முடைய ராஜ்யத்தின் உயர்ந்த வாழ்க்கையை வாழும் படி, இன்று என் கவனத்தை உம்மீது வைக்க எனக்கு உதவுவீராக.