“நான் மனுஷர் பாஷைகளையும் தூதர்பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும் இருப்பேன்.” – 1 கொரி 13:1
எங்கள் திருமண நாட்களின் ஆரம்பத்தில், உண்மையிலேயே என் கணவர் டேவை நேசிப்பதற்கு, சில சமயங்களில் நான் சில தியாகங்களை செய்ய வேண்டியிருக்கும் என்பதை கற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. அதுவரை, நான் என் வழியை மட்டுமே விரும்பினேன்.
1 கொரிந்தியர் 13:1ல் குறிப்பிடப்பட்டுள்ள, சத்தமிடும் வெண்கலம் போன்று இருந்தேன்.
முதிர்ச்சியின் மிக உயர்ந்த வடிவம் அன்பு. இதற்கு பெரும்பாலும் ஒரு தியாகம் தேவைப்படுகிறது. அன்புக்கு ஒருவித தியாகம் தேவைப்படுவதால், நம் பங்கில், நாம் உண்மையில் மற்ற நபரை நேசிக்காமல் இருக்கலாம். நம்முடைய செயல்களில் எந்த தியாகமும் இல்லை என்றால், நாம் அவர்கள் நமக்காக செய்த நல்ல காரியங்களுக்கு பெரும்பாலும் எதிர்வினையாற்றுகிறோம் அல்லது அவர்கள் மீது சில கட்டுப்பாட்டைப் பெறுவதற்கு கனிவாக இருப்பதைப் போன்று நடக்கின்றோம்.
உண்மையான அன்பு தன்னைத் தானே தருகிறது என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். எனவே உங்கள் முடிவுகள் எப்போதும் உங்கள் மனைவியின் நலன்களை இருதயத்தில் கொண்டதாக இருக்க வேண்டும். நீங்கள் அப்படி செய்யும் போது, உங்களை நீங்களே கொடுக்கிறீர்கள்.
கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் தியாகத்துடனும், நிபந்தனையுமின்றி நேசிக்க வேண்டும் என்பதே கடவுளின் விருப்பம். இதன் பொருள், எல்லா நேரத்திலும் நீங்கள் நினைத்ததைப் பெற்றுக் கொள்ள இயலாது. ஆனால் ஒரு நல்ல செய்தி என்னவென்றால், கணவனும் மனைவியும் தங்கள் சுயநல ஆசைகளை தியாகம் செய்யும்போது, வெற்றிகரமான திருமணத்தை அவர்கள் பெற்றிருப்பார்கள்!
ஜெபம்
தேவனே, நான் என் திருமணத்தில், உண்மையான அன்பில் நடக்க விரும்புகிறேன். நான் எப்போதும் என் சொந்த வழியைப் பின்பற்றாமல், என் வாழ்க்கை துணைக்காக தியாகம் செய்ய விருப்பமுள்ளவனாக இருக்க தீர்மாணிக்கிறேன்.