நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு. – ரோமர் 12:21
நாம் நம் உறவை கிறிஸ்துவுடன் தொடங்கியபோது, தேவன் நம்மை எதற்காக சிருஷ்டித்தாரோ அப்படியாக மாற வாழ் நாள் முழுவதற்குமான பிரயாணத்தை தொடங்குகின்றோம். இந்த செயல்முறையிலே, நாம் நம் பலவீனங்களை எப்படி மேற்கொண்டு தேவனுடைய பெலத்திலே வாழ்வது என்பதை கற்றுக்கொள்வோம். அப்படியென்றால் தீய பழக்கங்களை நாம் உடைக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
பல வருடங்களாக, நான் நினைத்தது நடைபெறாத போது கோபப்படுவேன். ஒருவேளை அது உங்களுடைய தீய பழக்கமாக இருக்கலாம். ஒருவேளை நீங்கள் பிறரைப் பற்றி பேசலாம் அல்லது சபிக்கலாம் அல்லது அதிக அளவு தேனீர் பருகலாம் அல்லது தொலைக்காட்சியில் அதிக நேரம் செலவிடலாம் அல்லது உங்களுக்கு தேவைப்படாத பொருட்களின் மேல் அதிகப்பணம் செலவிடுவதாக கூட இருக்கலாம். உங்கள் தீய பழக்கம் எதுவாக இருப்பினும் அதை உங்களால் உடைக்க இயலும்.
தீய பழக்கத்தை உடைப்பது சுலபமானது என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் நம் தீய பழக்க நாம் அதிகாரம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். நாம் நம் உணர்ச்சிகளால் ஆண்டு கொள்ளப்பட அவர் விரும்புவதில்லை. நாம் வெற்றியை பெற்றிருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.
தீய பழக்கத்தை உடைக்க தொடர்ச்சியாக அடுத்தடுத்து நல்ல தேர்வுகளை செய்ய வேண்டும். நம்மில் அநேகர் பரிசுத்த ஆவியானவரின் உதவியின்றி காரியங்களை செய்ய முற்படுவோம். நாளடைவில் தேவனின் உதவியின்றி நாம் அவரை பிரியப்படுத்த இயலாது என்பதை கண்டு கொள்வோம்.
விரிவாக்க வேதம் பரிசுத்த ஆவியானவரை ‘நமக்கு அருகில் இருப்பவர்’ என்று சொல்லுகிறது. ஒருவேளை நீங்கள் ஏதாவது பிரச்சினைக்கு உள்ளாகி உதவி வேண்டும் என்று கேட்கும் பொழுது, அவர் நம் அருகில் இருக்கிறார். ஆனால் அவரை அழைக்காமல் அவர் உதவிக்கு வர மாட்டார். அவர் உதவும் படி அவரை நீங்கள் கேட்கவேண்டும்.
ரோமர் 12:12-ல் தீமையை நன்மையால் வெல்ல வேண்டுமென்று பார்க்கிறோம். தேவனுடைய வார்த்தையில் அது ஒரு மிகப்பெரிய இரகசியமாகும். தோற்று விடுவோம் என்று பயப்படுவதற்கு பதிலாக தேவன் பேரிலே கவனத்தை வைத்து உங்கள் வெற்றிகளை கவனிக்கும்போது அது மிகவும் சுலபமானதாக விடுகிறது.
ஆவியிலே நடக்கும் சரியான தீர்வை இன்றே தெரிந்தெடுங்கள். தீய பழக்கங்களை மேற்கொண்டு வெற்றியோடு வாழுங்கள்!
ஜெபம்
தேவனே, நான் என் தீய பழக்கத்தோடு வாழ இனியும் விரும்பவில்லை. என்னை ஆண்டு கொள்ள விரும்பும் சோதனைகளின் மேல் நீர் எனக்கு கொடுத்திருக்கும் அதிகாரத்தை எடுத்துக் கொள்வதை நான் தெரிந்து கொள்கிறேன். பரிசுத்த ஆவியானவரை பின்பற்றி ஒரு புதிய வாழ்க்கைக்குள்ளாக நான் செல்கின்றேன்.