“விசேஷமாய், என் சகோதரரே, வானத்தின்பேரிலாவது, பூமியின்பேரிலாவது, வேறெந்த ஆணையினாலாவது சத்தியம்பண்ணாதிருங்கள்; நீங்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லக்கடவீர்கள்.” – யாக் 5:12
தீர்மாணம் எடுக்காமலிருப்பது ஒரு பரிதாபமான நிலையாகும். நிச்சயமாகவே ஒரு எளிமையான வாழ்க்கையின் பலன் அல்ல. தவறான தீர்மாணம் எடுத்து விடுவோமென்ற பயத்தினால், அதை எடுக்காமலேயிருப்பது முடியாதது. நம் மனதில் தீர்மாணத்தை எடுக்க முடியாமலிருப்பதால் எவ்வளவு நேரத்தை விரயமாக்குகிறோம் என்று தெரியுமா?
நாம் நமக்கு முன் இருக்கும் தேர்வுகளை தெரிந்து கொள்வதில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம். நான் சொல்வது ஒரு எளிமையான உதாரணமாக இருக்கக் கூடும், ஆனால் இதைப் பற்றி சிந்தியுங்கள். காலையிலே நீங்கள் உங்கள் ஆடை அலமாரிக்கு முன் நின்று கொண்டு உங்கள் எல்லா ஆடைகளையும் பார்த்துக் கொண்டிருப்பதற்கு பதிலாக ஏதோவொன்றை தெரிந்தெடுத்து அணியுங்கள். அதை மேலும் கீழும் பார்த்துக் கொண்டிருந்து பணிக்கு தாமதமாக செல்லாதீர்.
நீங்கள் எடுக்கும் தீர்மாணங்களைக் குறித்து கவலைப்படாமல் இருக்க உங்களை உற்சாகப்படுத்துகிறேன். இருமனமுள்ளவர்களாகவோ, மேம்போக்கானவர்களாகவோ இல்லாமல், ஒரு தீர்மாணம் எடுத்த பின் அதைக் குறித்து சந்தேகப்பட்டுக் கொண்டிராமலிருங்கள். ஏனென்றால் தீர்மாணித்த பின் அதைக் குறித்து சந்தேகப்படுவது நீங்கள் செய்யும் அனைத்திலிருந்தும் உங்கள் சந்தோசத்தை திருடி விடும். உங்களால் இயன்ற தீர்மாணத்தை எடுங்கள். அதன் பலனுக்காக தேவனை நம்புங்கள்.
ஜெபம்
பரிசுத்த ஆவியானவரே, தீர்மாணிக்காமல் இருப்பது, என்னை எங்கும் எடுத்துச் செல்வதில்லை என்பதைக் காட்டியமைக்காக நன்றி. என்னுடைய ‘ஆம்’ என்பதும் ‘ஆம்’ என்றும் ‘இல்லை’ என்பது ‘இல்லை’ என்றும் இருக்கட்டும். என்னால் இயன்ற தீர்மாணத்தை எடுக்கும் போது தவற மாட்டேன் என்று அறிந்திருக்கிறேன். அதன் பலனுக்காக உம்மையே நம்புகிறேன்.