
“இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.” – எபி 13:8
என் கணவர் டேவ் அவர்கள், சமாதானத்திலும், நிலைவரத்தோடும் தொடர்ந்து வாழும் ஒருவருக்கு எடுத்துக் காட்டாக விளங்குகின்றார். இயேசுவின் பெயர்களுள் ஒன்றான கன்மலையை அவர் அடிக்கடி நினைவுறுத்துகிறார்.
பாருங்கள், ஒரு நிலையான கன்மலையைப் போன்று, இயேசு மாறாதவராக இருந்தார். எபிரேயருக்கு எழுதிய நிருபத்தில் அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராக இருக்கிறார் என்று சொல்லுகிறார்.
டேவ் கொண்டிருக்கும் சமாதானம், நிலைவரத்தோடு வாழ நான் போராடுவதுண்டு. ஒரு நாள் நான் சந்தோசமாக இருப்பேன், மறு நாள் சோர்வடைந்து விடுவேன். இறுதியாக டேவை அவ்வளவு சமாதானமாக மாற்றுகிறது எது என்பதைக் கண்டுபிடித்தேன். அவர் மாறாத தேவனை நம்புகிறார். என்ன நேர்ந்தாலும் சரி தேவன் மாறாதவராக இருக்கிறார் என்று அறிந்திருக்கிறார். நம்மோடு எப்போதும் இருக்கும் தேவனாகிய கர்த்தர் வல்லமையுள்ளவர் என்று செப்பனியா 3:17லே வேதம் சொல்லுகிறது. நாம் மேற்கொள்ளும் படி உதவ வல்லவராகவும், அவருடைய மாறாத வார்த்தையாலும், ஆவியாலும் வாழ நமக்கு உதவுகிறவராகவும் இருக்கிறாரென்று வேதம் சொல்லுகிறது.
நம் தேவனால் கூடும்…அவர் நிலையானவர். ஏன் அவரை இன்று நம்பக்கூடாது? என்ன நடந்தாலும் சரி, தேவன் மாறாதவராக இருக்கிறார் என்பதை உணர்ந்தவர்களாக உங்களுடைய வாழ்க்கையை அவருடைய மாறாத சுபாவத்தின் அடிப்படையிலே கட்டும் போது அவர் உங்களுக்கு கொடுக்க ஏங்கும் தொடர்ச்சியான அந்த சந்தோசத்தை உங்களால் அனுபவிக்க இயலும். ஏன் இன்றே தொடங்கக்கூடாது?
ஜெபம்
தேவனே, உம்மால் செய்ய இயலும். நீர் நிலைத்திருக்கிறீர்! இந்த வாழ்விலே நிலைத்திருக்கக் கூடியவர் நீர் மட்டுமே. என்ன நடந்தாலும் சரி, நான் உம்மை சார்ந்திருக்கலாம். உம்முடைய மாறாத தண்மையை சார்ந்திருக்கலாம் என்பதை அறிந்திருக்கிறேன்.