
“இயேசு அவளை நோக்கி: நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா என்றார்.” – யோவாண் 11:40
மார்த்தாள், மரியாள் சகோதரன் லாசரு இறந்து நான்கு நாளைக்கு பின் இயேசு அவர்களை சந்தித்ததை அறிந்திருக்கின்றீர்களா? அவர் இறுதியாக அங்கே வந்த போது மார்த்தாள், போதகரே நீர் இங்கே இருந்திருப்பீரேயென்றால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான் என்று கூறினாள். (யோவாண் 11:21)
மார்த்தாள் நிச்சயமாகவே நம்பிக்கையற்ற நிலையில் இருந்தாள். பின்னர் இயேசு அவளிடம், உன் சகோதரன் மீண்டும் உயிர் பெறுவான் என்று சொன்னார். மார்த்தாள் பிரதியுத்திரமாக, கடைசி நாளிலே அவன் எழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன் என்றாள் (வசனம் 23-24). இயேசு என்ன சொன்னார் என்பதை அவள் உண்மையிலேயே அறிந்து கொண்டாள் என்று நான் நினைக்கவில்லை. அவள் எதிர்காலத்தில் நடைபெறக்கூடிய ஒன்றை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள், அந்த சமயத்திலே நடைபெறக்கூடியதை அல்ல. அவள் உண்மையிலேயே காரியங்கள் மாற வேண்டுமென்று எதிர்பார்க்கவில்லை.
நம்மில் அனேகர் மார்த்தாளைப் போன்று நம்முடைய பிரச்சினைகளில் மாட்டிக் கொண்டு தேவன் நம் காரியங்களை மாற்றுவார் என்பதை உணரலாமலிருக்கிறோம். ஆனால் இயேசு லாசருவை உயிரோடு எழுப்பினார். உங்கள் வாழ்விலுள்ள லாசருக்களையும் எழுப்ப இயலும். ஒருவேளை ஒரு உறவை சீரமைக்க வேண்டியதாக இருக்கலாம். உங்கள் ஆரோக்கியத்திலும், பொருளாதாரத்திலும் ஒரு விடிவை ஏற்படுத்த வேண்டியிருக்கலாம். அவருடைய சித்தத்திற்குள்ளாக முன்னேறி செல்வதை தடுக்கும் தடைய நீக்குவதாக இருக்கலாம். உங்களுடைய தேவை எதுவாக இருப்பினும், தேவனால் எல்லா காரியங்களும் கூடும்! (மாற்கு 10:27)
நம்பிக்கையை இழந்து விடாதீர். இப்போது ஒருவேளை நீங்கள் மனக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கலாம். ஆனால் எல்லா கஷ்ட நஷ்டங்களிலிருந்தும் தேவனால் ஒரு புதிய தொடக்கத்தை கொண்டு வர இயலும். தேவனை நம்பி அவர் மகிமையாய் உங்கள் வாழ்க்கையிலே காணப்படுவதை கவனியுங்கள்.
ஜெபம்
தேவனே, என் வாழ்வின் ஒவ்வொரு சூழ்னிலையையும் உம்முடைய மகிமைக்காக செய்வீர் என்பதை அறிந்திருக்கிறேன். என்னுடைய பிரச்சினைகளில் மாட்டிக் கொள்வதற்கு பதிலாக என் வாழ்க்கையிலே உள்ள லாசருக்களை நீர் எழுப்ப உம்மை நம்புகிறேன்.