
“சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில்போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள். அதற்குப் பிரபுவும், தலைவனும், அதிகாரியும் இல்லாதிருந்தும், கோடைகாலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து, அறுப்புக்காலத்தில் தனக்குத் தானியத்தைச் சேர்த்துவைக்கும்.” – நீதி 6:6-8
தேவன் தனது பிள்ளைகளுக்கு வாழ்க்கையில் தொடர பெரிய கனவுகளைத் தருகிறார். அந்த கனவுகள் நிறைவேற வேண்டுமானால், தனிப்பட்ட வளர்ச்சிக்காக பயிற்சியிலும், கடவுளுடன் ஒத்துழைப்பிலும் நேரத்தை செலவிட வேண்டும். இந்த செயல்முறையில் நேரம், உறுதிப்பாடு மற்றும் கடின உழைப்பு ஆகியவை அடங்கும்.
இந்த நாட்களில், நாம் வசதிக்கு, அதிகமாக பழகி விட்டோம். துணிகளை துவைக்கவும், காய வைக்கவும், பாத்திரங்களைக் கழுவவும் தானியங்கி இயந்திரங்களை உபயோகிக்கிறோம். நாம் ஒரு பொத்தானை அழுத்தினால் ஒரு இயந்திரம் வேலை செய்ய தொடங்கி விடுகிறது. ஆனால் தேவனுடைய ராஜ்யத்தில் எதுவும் தானாக இயங்குவது இல்லை. தேவையான திறன்களை வளர்த்துக் கொள்ளாமல் அவருடைய திட்டங்களையும் நோக்கங்களையும் நீங்கள் நிறைவேற்ற முடியாது.
நீதிமொழிகளில், எறும்பு பற்றி வாசிக்கிறோம். எறும்புகள் அவற்றின் சிறிய உருவத்தை தீர்மாணத்தாலே ஈடுகட்டுகிறது. நாம் அவைகளிடமிருந்து ஒரு மாபெரும் அளவிலான பாடத்தை கற்றுக்கொள்ளலாம். நாம் சுய ஊக்கமும், சுய ஒழுக்கமும் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்காக வாழ நீங்கள் அந்த வகையான சுய ஊக்கத்தையும், ஒழுக்கத்தையும் வளர்த்துக் கொள்ளும்போது, கடவுள் உங்களை எப்படியெல்லாம் இருக்கும் படியாக சிருஷ்டித்தாரோ அப்படி மாறுவீர்கள். மேலும் மற்றவர்களை அவரிடம் வழிநடத்துவீர்கள். ஆகவே, உறுதியுடன் வளர்ந்து கொண்டே இருங்கள். உங்கள் கனவுகள் நனவாவதைப் பாருங்கள்!
ஜெபம்
ஆண்டவரே, நான் எப்படி இருக்க வேண்டுமென்று சிருஷ்டித்தீரோ அப்படி எல்லாமாக நான் இருக்க விரும்புகிறேன். நீர் என் இருதயத்தில் வைத்த கனவுகளை நிறைவேற்றுவீராக. நான் உம்மீது கவனமாக இருந்து, கிறிஸ்துவில் வளரத் தேவையான நேரம், உறுதிப்பாடு மற்றும் கடின உழைப்பை கொடுத்து, எனக்கான உம்முடைய திட்டத்தில் வாழ எனக்கு உதவுவீராக.