
“தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும்.” – சங்கீதம் 139:23
பல ஆண்டுகளுக்கு முன் நாங்கள் பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த போது, விடிவு காலத்திற்காக விசுவாசித்து களைத்தவளாக தேவனுக்கு முன்பாக அழுதேன். கொஞ்ச நேரம் அதற்காக அழுது விட்டு, பின்னர் தேவனுடைய கிருபையினால் நான் ஒரு தீர்மாணம் எடுத்தேன். ‘தேவனே, நான் சாகும் வரை தசமபாகத்தையும், காணிக்கையையும், அதனால் ஏதாவது நடப்பதைப் பார்த்தாலும், பார்க்காவிட்டாலும் கொடுப்பேன்’ என்று அறிக்கையிட்டேன்.
நான் ஏன் கொடுத்துக் கொண்டிருக்கிறேன் என்பதைப் பார்க்க அது ஒரு சோதனையாக இருந்தது என்று என் முழு இருதயத்தோடும் நம்புகிறேன். எனக்கு சரியான, தேவனுக்கேற்ற நோக்கங்கள் இருந்ததா என்பதை தேவன் எனக்கு வெளிப்படுத்த விரும்பினார். நான் பெற்றுக் கொள்வதற்காக மட்டுமே கொடுத்துக் கொண்டிருப்பேனேயென்றால் தேவனிடமிருந்து ஏதாவது பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதற்காக சுயநலமாய் கொடுத்திருப்பேன்.
‘இதை செய், அப்போது இதை பெற்றுக் கொள்வாய்’என்று சொல்லும் அனேக போதனைகளும், பிரசங்களும் இருக்கிறது. இது செய்வதற்கு சரியாக இருப்பதாலும், தேவனை மகிமைப்படுத்துகிறதாலும் இந்த சரியான காரியத்தை நான் செய்ய விரும்புகிறேன் என்று சொல்லும் இருதயத்தை பெற்றிருக்க விரும்புகிறேன்.
இன்று உங்கள் நோக்கங்களை நேர்மையாக ஆராய்ந்து அது சுயத்தை சார்ந்து இல்லாமலிருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். சரியான காரணங்களுக்காக தேவனை சேவிக்க ஒரு முழு இருதயத்தோடு அர்ப்பணித்துக் கொள்ளுங்கள்.
ஜெபம்
பரிசுத்த ஆவியானவரே, என் இருதயத்தை ஆராய்ந்து என் உண்மையான நோக்கங்களையும், எண்ணங்களையும் இன்று எனக்கு வெளிப்படுத்துவீராக, அவை எந்த பகுதியிலாவது தேவனுக்கு ஏற்புடையதாக இல்லாமலிருப்பின் அதை எனக்கு குறிப்பிட்டு சொல்லி, நான் மாற எனக்கு உதவும்.