விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும், நீங்கள் அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர்களாகி! (எபேசியர் 3:17)
நீங்கள் மீண்டும் பிறந்திருந்தால், பரிசுத்த ஆவியின் வல்லமையின் மூலம் இயேசு உங்கள் உள்ளத்தில் வாழ்கிறார் என்பதை நீங்கள் நிச்சயமாக அறிவீர்கள். கேள்வி என்னவென்றால், தேவன் உங்களுக்குள் நன்றாக இருக்கிறாரா? அவர் உங்களுக்குள் இருப்பதை தன் வீட்டில் இருப்பது போல் உணர்கிறாரா? தேவனுடைய ஆவி உங்களுக்குள் வாழ்ந்தாலும், பயம், கோபம், பொறாமை, முணுமுணுப்பு மற்றும் புகார் போன்ற பிற விஷயங்கள் உங்களுக்குள் இருக்கிறது.
முணுமுணுப்பு, புகார் மற்றும் கருத்து வேறுபாடுகள் இருக்கும் இருதயத்தில் அவர் வாழ்வது எப்படி இருக்கும் என்பதற்கான ஒரு உதாரணத்தை கடவுள் ஒருமுறை எனக்குக் கொடுத்தார். நீங்கள் ஒரு நண்பரின் வீட்டிற்குச் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், உங்கள் தோழி, “ஓ, உள்ளே வா, நான் உனக்கு ஒரு கப் காபி தருகிறேன்.” உட்காரு, உன் வீட்டில் இருப்பதைப் போல் இரு என்று சொல்கிறார். பிறகு, உங்கள் தோழி தன் கணவனைக் கத்தத் தொடங்குகிறாள், அவர்கள் இருவரும் உங்கள் முன்னாலேயே கத்தி சண்டையிடுகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்னிலையில் நீங்கள் எவ்வளவு நன்றாக உணருவீர்கள்?
நாம் கர்த்தருடைய ஆவியானவருக்கு வசதியான “வீடாக” இருக்க விரும்பினால், அவருடைய பிரசன்னத்தை மறந்து விடக்கூடிய அல்லது அவரை புண்படுத்தும் விஷயங்களை நாம் கைவிட வேண்டும். நாம் முணுமுணுப்பதை நிறுத்த வேண்டும், நமக்குள் சச்சரவு மற்றும் அமைதியின்மையை அனுமதிப்பது அல்லது மன்னிக்க முடியாத தன்மையைக் கடைப்பிடிப்பது ஆகியவற்றை நிறுத்த வேண்டும். மாறாக, கடவுளின் பிரசன்னத்தை உணரும் மற்றும் மதிக்கும் விஷயங்களில் நம் உள்ளான வாழ்க்கை ஈடுபடுவதை உறுதி செய்ய வேண்டும். நம் வாயில் துதியும், நன்றியும் நிறைந்திருக்க வேண்டும். நாம் ஒவ்வொரு நாளும் எழுந்து, நம் இருதயத்தில், “காலை வணக்கம், ஆண்டவரே. நீர் இன்று என் வீட்டில் இருக்கவும், என்னில் வசதியாக இருக்க வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன்” என்று சொல்லுங்கள்.
நாம் அனைவரும் நம் இருதயத்திற்குள் செல்வதைக் கணக்கிட வேண்டும், ஏனென்றால் அது கடவுளின் வசிப்பிடமாகும். நம் உள்ளான வாழ்க்கையை நாம் ஆராயும்போது, கடவுள் தம் வீட்டை உருவாக்கத் தேர்ந்தெடுத்த புனித பூமியைப் பார்க்கிறோம். அவரை நம்மில் வசதியாக வாழ செய்ய உறுதிமொழி ஏற்போம்.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: நீங்கள் கர்த்தருடைய ஆவியின் வசதியான வீடாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.