தேவனுடைய இயற்கைக்கப்பாற்பட்ட தயவு

“கர்த்தர் தரித்திரம் அடையச்செய்கிறவரும், ஐசுவரியம் அடையப் பண்ணுகிறவருமாயிருக்கிறார்; அவர் தாழ்த்துகிறவரும், உயர்த்துகிறவருமானவர்.” – 1 சாமு 2:7

இயற்கையான தயவிற்கும், அதற்கப்பாற்பட்ட தயவிற்கும் வித்தியாசம் உண்டு. இயற்கையான தயவு சம்பாதிக்கப்பட வேண்டும், ஆனால் இயற்கைக்கப்பாற்பட்டதோ தேவனிடமிருந்து வரும் ஈவு.

1 சாமு 2:7 சொல்வதாவது, கர்த்தரே, தரித்திரம் அடையச் செய்கிறவரும், ஐசுவரியம் அடையச் செய்கிறவருமாயிருக்கிறார். அவர் தாழ்த்துகிறவரும், உயர்த்துகிறவருமானவர். இதற்கு சரியான உதாரணம் எஸ்தருடைய வாழ்க்கையாகும். மறைவிலிருந்து தேவன் அவளை உயர்த்தி முழு நாட்டிற்குமான மகா ராணியாக மாற்றினார். அவள் சந்தித்த ஒவ்வொருவரிடமும், இராஜா உட்பட, தயவைக் கட்டளையிட்டார்.

அவளும், அவளின் குலத்தாரும் துஷ்டனாகிய ஆமானால் கொல்லப்படாத படி அவள் அந்த தயவை உபயோகித்தாள். அவள் இராஜாவிடம் சென்று, அவர் அதிலே தலையிட வேண்டும் என்று கேட்க பயந்திருக்கலாம். ஆனால் எஸ்தரோ தனக்கு தேவனுடைய தயவு இருக்கிறதென்று அறிந்திருந்தவளாக முழுமையான உறுதியுடன் முன்னோக்கி சென்றாள்.

எஸ்தரைப் போன்று தேவனுடைய தயவினால் ஏற்படும் விடுதலையிலும், சுதந்திரத்திலும் வாழ வேண்டும். உங்கள் வாழ்விலே எத்தைகய சூழ்னிலை ஏற்பட்டாலும் இயற்கைகப்பாற்பட்ட தயவிற்காக தேவனை நம்புங்கள். நிலைமை எவ்வளவு நம்பிக்கையற்றதாக காணப்பட்டாலும், தேவனால் உங்களை உயர்த்த இயலும். உங்களுடைய வாழ்க்கை அவருடைய கரத்திலே இருக்குமென்றால் தேவனுடைய ஒளி உங்கள் மேல் பிரகாசிக்கின்றது.

ஜெபம்

கர்த்தாவே நான் இயற்கையான தயவை சார்ந்திருக்கவில்லை. மாறாக உம்முடைய இயற்கைக்கப்பாற்பட்ட தயவிலே வாழ விரும்புகிறேன். என்னுடைய வாழ்க்கை உம்முடைய கரங்களிலே இருப்பதால், உம்மால் என்னை உயர்த்த இயலும் என்று அறிந்திருக்கிறேன்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon