“ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது.” – ரோமர் 5:15
தேவன் நீங்கள் எப்படி வாழ வேண்டுமென அழைத்தாரோ அப்படி வாழ ஏதுவாக்கும் வல்லமையே கிருபையாகும். ஆனால் நாம் தேவனுடைய சித்தத்திற்கு புறம்பாக வாழ தேவன் நமக்கு கிருபை அளிக்கிறதில்லை. தேவன் நாம் ஒன்றை செய்ய வேண்டாம் என்று சொல்லியிருந்தும் அதை நாம் செய்ய தீர்மாணித்தால், அவருடைய அபிஷேகத்தை இழந்து வேதனையை அனுபவிப்போம்.
கிருபையானது திறனுக்கு சமம். நம்முடைய வாழ்க்கையில் அவருடைய அழைப்பை நிறைவேற்ற, நமக்கு கிருபையைக் கொடுக்கிறார். நாம் நம் சொந்த காரியத்தைச் செய்யும்போது, அதை நம் சொந்தமாகச் செய்கிறோம். நாம் அவருடைய வழிநடத்துதலைப் பின்பற்றும்போது, அவர் நம்மைச் செய்ய அழைக்கிறதைச் செய்வதற்கான கிருபையையும், வல்லமையையும் எப்போதும் நமக்கு கொடுக்குகிறார்.
சிறந்த அம்சம் என்னவென்றால், அவருடைய கிருபையைப் பெறுவதற்கு நாம் தேர்வு செய்யும் போது, அதைச் சம்பாதிக்க நாம் எதுவும் செய்ய வேண்டியதில்லை. தேவனுடைய அழைப்பை பின்பற்ற தேர்வு செய்யும் போது, அவர் உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறார். உங்கள் பாவங்களை மூட இயேசு மரித்தார். நீங்கள் பரிசுத்த ஆவியானவரை அணுகுவதன் மூலம் கடவுளுக்கு முன்பாக நீதியுடன் நடக்க முடியும், அவர் அன்றாட வாழ்க்கையில் உங்களுக்கு உதவ முடியும்.
அவருடைய கிருபையையும், திறனையும் நீங்கள் பெறும் நிலையில் இருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த நான் இன்று உங்களை கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் உங்கள் சொந்த பாதையைத் தொடர முயற்சிக்கிறீர்கள் என்றால், நீங்கள் அவரைப் பின்பற்ற விரும்புகிறீர்கள் என்று கடவுளிடம் சொல்லுங்கள். அவரின் உதவியை நாடுங்கள். அவருடைய கிருபையை அளிக்க அவர் எப்போதும் உண்மையுள்ளவராக இருக்கிறார்.
ஜெபம்
பரிசுத்த ஆவியானவரே, என் வாழ்க்கையில் உமது கிருபை இல்லாமல் என்னால் வெற்றிகரமாக வாழ முடியாது. உம்முடைய அழைப்பை நான் பின்பற்ற விரும்புகிறேன், ஒவ்வொரு நாளும் நான் எப்படி வாழ வேண்டும் என்று நீர் விரும்புகிறீரோ அப்படி வாழ எனக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.