“கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.” – சங் 34:8
நாம் தேவனுடைய குணாதிசயத்தை அறிந்திருப்பது அவசியமானது. ஏன்? அதனால் நமக்கு பகுத்தறிவு ஏற்படுகின்றது. நான் தேவனுடைய குணாதிசயத்தை அறிந்திராமல் இருப்போம் என்றால், யார் தேவனிடமிருந்து வருகிறவர்கள், யார் இல்லை என்பதை எப்படி அறிந்து கொள்வோம்? தேவன் யாரென்றும் அவர் என்ன செய்கிறார் என்றும் நான் அறிந்துகொள்ள எனக்கு உதவும் 3 குணாதிசயத்தை பற்றி பார்ப்போம்.
- நீதி: தேவன் நீதியுள்ள. நீதி என்ற இந்த வார்த்தையானது மிகவும் அருமையானது. ஏனென்றால் அவர் எப்போதுமே எது தவறாக இருந்தாலும் அதை சரியாக மாற்றுவார். நான் தவறாக நடத்தப்படும் போது கவலைப்படாமல் இருக்க இது எனக்கு உதவுகிறது. ஏனென்றால் தேவன் நீதி செய்வார் என்பதால் அவர் நீதி ஆகவே இருக்கிறாரே.
- நன்மை: தேவன் நல்லவர். இந்த உண்மை ஒருபோதும் மாறாது. அவர் எப்போதாவது அல்லது நன்றாக இருக்கும்போது மட்டுமோ இல்லை. எல்லா சமயத்திலும் அவர் நல்லவராகவே இருக்கிறார். சங்கீதம் 34:8 சொல்கிறது ‘கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்’. காரியங்கள் நன்றாக நடைபெறாத போது தேவனின் நன்மைகளில் நான் பெரிய உற்சாகத்தை பெறுகிறேன்.
- பரிசுத்தம்: தேவன் பரிசுத்தமானவர், நீதி, பாவ அழுக்கிலிருந்து அவர் நம்மையும் பரிசுத்தமாக்கவும், தூய்மையாக்கவும், சுத்தமாக்கவும், விடுதலையாக்கவும் விரும்புகிறார். உண்மையிலேயே அவருடனான என்னுடைய நடை, எனக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அவர் செய்வதெல்லாம் சரி என்று உணர செய்திருக்கிறது. இதனால் நான் அவருடன் இணைப்பில் இருக்க உதவுகிறது.
இந்த மூன்று குணாதிசியங்கள் மட்டுமே தேவனுடைய குணம் அல்ல. ஆனால் எனக்கு அவை மிகவும் முக்கியமான வல்லமையானவை. இந்த குணாதிசயங்களை பற்றியும் உங்களுக்கு முக்கியமாக காணப்படுவதை பற்றியும் யோசித்துப் பார்க்க உங்களை உற்சாகப்படுத்துகின்றேன்.
அவர் யாராக இருக்கிறார் என்பதைப்பற்றி நீங்கள் படிக்கும்போது, பரிசுத்த ஆவியானவர் தம்முடைய சொந்த குணாதிசயங்கள் உங்களுக்குள்ளே சேர்க்கப்பட உதவுவார். உங்களுடைய அனுதின வாழ்க்கையிலே அப்பியாசப் படுத்த தொடங்கி தேவனுடைய கிரியைகளை காணுங்கள். ‘அவர் எவ்வளவு நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்!’
ஜெபம்
ஆண்டவரே நீர் அற்புதமானவர்! உமது நீதி, நன்மை, பரிசுத்தம் போன்ற எண்ணிலடங்கா குணங்கள் என்னை ஆச்சரியப்படுத்தி நீர் எவ்வளவு பெரியவராக இருக்கிறீர் என்பதை எனக்கு ஞாபகப்படுத்துகிறது. நான் இன்னும் உம்மை போல் ஆகும்படி உம்முடைய குணாதிசயத்தை பற்றி எனக்கு தொடர்ந்து நினைவுறுத்துவீராக.