
இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன். (யோவான் 15:15)
ஆதியாகமம் 18:17 இல், தேவன் ஆபிரகாமை தனது நண்பர் என்று அழைக்கிறார், பின்னர் சோதோமையும், கொமோராவையும் அழிக்கும் திட்டத்தை அவருடன் பகிர்ந்து கொண்டார். அவர் ஆபிரகாமுடன் அந்த நோக்கங்களைப் பகிர்ந்து கொண்டது போலவே, உங்களுடனும் சில காரியங்களைப் பகிர்ந்துகொள்வார் – அவருடைய இருதயம், அவருடைய ஆசைகள், அவரது நோக்கங்கள், அவருடைய திட்டங்கள் – அவருடைய நண்பராக. உங்கள் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய புரிதலையும், நுண்ணறிவையும் அவர் உங்களுக்குத் தருவார், மேலும் இதைப் பற்றி என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்குச் சொல்வார். அவர் உங்களை வழிநடத்துவார் மற்றும் எதிர்காலத்திற்கு தயாராக இருக்க உதவுவார். தேவனுடைய நண்பராக, சூழ்நிலையின் காரணத்தினால், நீங்கள் பாதுகாப்பில்லாமல் இருக்க வேண்டியதில்லை அல்லது இந்த உலகத்திற்கு பதுங்கியிருக்க வேண்டியதில்லை. நீங்கள் உண்மையறிந்து தயாராக இருக்க முடியும்—நீங்கள் தேவனுடைய நண்பராக இருப்பதால் அவருடைய சத்தத்தைக் கேட்கிறீர்கள். நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பும் அனைத்தையும் அவர் துல்லியமாக வெளிப்படுத்தாமல் இருக்கலாம், ஆனால் நீங்கள் பொறுமையாக அவரை நம்பும்போது, அவர் உங்களுக்கு வழிகாட்டி உங்களுக்கு பெலன் தருவார்.
“நான் எப்படி கடவுளின் நண்பனாக முடியும்?” என்று நீங்கள் கேட்கலாம். இன்றைய வசனத்தின்படி, நீங்கள் ஏற்கனவே அப்படித்தான் இருக்கிறீர்கள். இந்த வசனத்தில், இயேசு தம் சீஷர்களிடம், “நான் உங்களை என் நண்பர்கள் என்று அழைத்தேன்” என்று கூறினார். நீங்கள் இயேசுவைப் பின்பற்றுபவராக இருந்தால், நீங்கள் நவீன கால சீஷர் மற்றும் அவருடைய நண்பர். எந்தவொரு நட்பிலும் இருப்பது போல், நீங்கள் ஒரு சாதாரண அறிமுகமாக இருக்கலாம் அல்லது நீங்கள் நெருங்கிய, நெருக்கமான தனிப்பட்ட நண்பராக இருக்கலாம். மற்றவர்களுடனான உங்கள் நட்பைப் போலவே, கடவுளுடனான உங்கள் நட்பும் வளர்கிறது. இயற்கையான நட்பை வளர்ப்பதற்கு நேரமும், சக்தியும் தேவைப்படுவது போல, தேவனுடனான உங்கள் உறவிற்கும் அது தேவை.
இன்று தேவனுடனான உங்கள் உறவில் நேரத்தையும், சக்தியையும் முதலீடு செய்ய நான் உங்களை ஊக்குவிக்கிறேன், அவருடைய வார்த்தையைப் படியுங்கள், தியானியுங்கள், அவருடைய நண்பராக அவருடன் பேசுங்கள், அவரிடமிருந்து கேளுங்கள், உங்கள் கவனத்தை அவருக்குக் கொடுங்கள்.
இன்று உங்களுக்கான கடவுளின் வார்த்தை: கடவுளுடனான உங்கள் உறவில் நேரத்தையும், சக்தியையும் முதலீடு செய்ய உங்கள் அட்டவணையில் இடமளிக்கவும்.