“நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.” – 2 கொரி 5:21
நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய இரண்டு மிக முக்கியமான கேள்விகள் இங்கே:
நான் கிறிஸ்துவில் யார் என்று எனக்குத் தெரியுமா? நான் நீதியிலே நடக்கிறேனா?
இந்த கேள்விகளுக்கு பலரால் சரியாக பதிலளிக்க முடியாது. அது தேவன், அவர்கள் நடக்க வேண்டுமென்று விரும்பும் விடுதலையிலும், சமாதானத்திலும் நடக்க முடியாத படி தடுக்கிறது.
இயேசு கிறிஸ்துவை நம்முடைய இரட்சகராக நாம் பெறும் தருணத்தில், தேவன் நம்முடைய பாவத்தை நீக்கிப் போட்டு, அவருடைய நீதியை நமக்குத் தருகிறார் என்று வேதம் கூறுகிறது. இது ஒரு ஈவு, அதை நாம் சம்பாதிக்க தேவையில்லை. ஆனால் நாம் அதை தரித்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறையும், நாம் அப்படி செய்யும் போது, அவருடைய சமாதானத்தைப் பெற்றுக் கொள்கிறோம்.
நீங்கள் கிறிஸ்துவில் யார் என்று உங்களுக்குத் தெரிந்தவுடன், நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்ய, தேவன் எப்போதும் உங்களுக்குத் தேவைப்படுவதைக் கொடுப்பார் என்ற சமாதானத்தையும், நம்பிக்கையும் கொண்டிருப்பீர்கள். அவர் உங்களை நேசிக்கிறார், அவர் உங்களுக்காக மரித்தார் என்பதை நீங்கள் அறிந்தால், நீங்கள் ஒவ்வொரு நாளும் எழுந்து, தேவனை நேசிக்க உங்களால் முடிந்த அனைத்தையும் செய்வீர்கள்.
கிறிஸ்துவில் நீங்கள் இருக்கிறீர்கள் என்று அறிந்திருக்கும் போது, அவர் உங்களுக்காக சம்பாதித்து வைத்திருக்கிற நீதியைப் தரித்துக் கொள்ளலாம். அதிலே நடக்கலாம்.
அவர் உங்கள் மேல் வைத்திருக்கும் அன்பை நீங்கள் அனுபவிக்கும்போது, உங்களிடம் உள்ள அனைத்தையும் வைத்து அவருக்காக வாழ்வதே உங்கள் இயல்பான பதில்.
ஜெபம்
ஆண்டவரே, நான் உம்மில் யாராக இருக்கிறேன் என்பதைப் பற்றி எப்பொழுதும் ஒரு உணர்வுள்ளவளாக இருக்க விரும்புகிறேன். நான் அனுதினமும் உமது நீதியை, தரித்துக் கொள்ளும் படி, நீர் எனக்காக செய்த அனைத்தையும் எண்ணிப் பார்க்க எனக்கு உதவும்.