“பார்வோன் ஜனங்களைப் போக விட்டபின்: ஜனங்கள் யுத்தத்தைக் கண்டால் மனமடிந்து, எகிப்துக்குத் திரும்புவார்கள் என்று சொல்லி; பெலிஸ்தரின் தேசவழியாய்ப் போவது சமீபமானாலும், தேவன் அவர்களை அந்த வழியாய் நடத்தாமல், சிவந்த சமுத்திரத்தின் வனாந்தர வழியாய் ஜனங்களைச் சுற்றிப் போகப்பண்ணினார். இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து அணியணியாய்ப் புறப்பட்டுப்போனார்கள்.” – யாத் 13:17-18
நம் வாழ்வில் சில காரியங்கள் நடைபெற நமக்கு நம்பிக்கையையும், கனவுகளையும் தேவன் தருகிறார். ஆனால் அவருடைய திட்டத்தின் சரியான நேரத்தைக் காண அவர் எப்போதும் நம்மை அனுமதிப்பதில்லை. வெறுப்பாக இருந்தாலும், சரியான நேரத்தை அறியாமல் இருப்பது பெரும்பாலும் நம்மை அந்த திட்டத்தில் வைத்திருக்கிறது. தேவனுடைய நேரத்தை நாம் ஏற்றுக் கொள்ளும் போது, தேவன், நம் பிரச்சினைகளை சரி செய்யும்போது, நாம் நம்பிக்கையுடன் வாழவும், நம் வாழ்க்கையை அனுபவிக்கவும் கற்றுக்கொள்ளலாம்.
யாத்திராகமம் 13:17-18ல், இஸ்ரவேலரை வாக்குப்பண்ணப்பட்ட தேசத்துக்கான பயணத்தில் நீண்ட, கடினமான வழியில், கடவுள் வழிநடத்தியதாகக் கூறுகிறது, ஏனென்றால் அவர்கள் அங்கே செல்லத் தயாராக இல்லை என்பதை அவர் அறிந்திருந்தார். அவர்களை பயிற்றுவிப்பதற்கு நேரம் வேண்டியிருந்தது. சில சோதனையான சூழ்னிலைகளினூடாக அவர்கள் செல்ல வேண்டியிருந்தது. அவர்கள் அப்படி நடந்து கொண்டிருக்கையில், தேவன் அவர்களைக் கவனித்துக் கொள்வதற்கும், அவர்கள் என்ன செய்ய வேண்டுமென்று அவர் விரும்பினாரோ அதை காண்பிப்பதற்கும் ஒருபோதும் தவறவில்லை.
நம்முடைய வாழ்க்கையிலும் இதுவே உண்மை… கடவுளின் பயிற்சி காலத்தில், ஒன்றை செய்யும்படி அவர் சொல்லும் போது, கேள்வி கேட்காமலும் எல்லாவற்றையும் கண்டுபிடிக்க முயற்சிக்காமலும் அவர் சொன்னதை செய்ய வேண்டும். காரியங்கள் எவ்வளவு நேரம் எடுத்தாலும், நாம் எப்போதும் கடவுளின் நேரத்தை ஏற்றுக்கொள்ளும்போது, அது எப்போதும் நன்றாக இருக்கும் என்று அறிந்திருக்கலாம்.
ஜெபம்
தேவனே, நான் உம்முடைய நேரத்தை ஏற்றுக்கொள்கிறேன். நான் எப்போதும் புரிந்து கொள்ளாமல் இருக்கலாம், ஆனால் உம்முடைய வழிகள் சரியானவை என்று எனக்குத் தெரியும். நான் உம்மை முழுமையாக நம்புகிறேன்.