ஜீவனை விரும்பி நல்ல நாட்களை காணவேண்டும் என்று இருக்கிறவன் பொல்லாப்புக்கு தன் நாவையும் கபடத்துக்கு தன் உதடுகளை விலக்கி காத்து. – 1 பேதுரு 3:10
நீங்கள் பேசும் வார்த்தையின் வல்லமையை பற்றிய விளங்கிக் கொள்ளுதலை பெற்றுக்கொள்ள முடியும் என்றால் அது உங்கள் வாழ்க்கையின் வழித்தடத்தையே மாற்றிவிடும்! உங்கள் வாயானது தேவனுக்காகவோ, சத்துருவுக்காகவோ ஒரு வல்லமையான ஆயுதமாக இருக்கக்கூடும். வேறு வார்த்தைகளில், நீங்கள் நேர்மறையான, உயர்த்தக்கூடிய, உற்சாகமான காரியங்கள் உங்கள் வாழ்க்கையிலே நடைபெற பேசலாம் அல்லது எதிர்மறையான, நம்பிக்கையற்ற, சோர்வடையச் செய்யக் கூடிய காரியங்கள் உங்கள் வாழ்விலே நடைபெற பேசலாம்.
நம்மில் எவருமே பிசாசின் வாயாக இருக்க விரும்ப மாட்டோம். ஆனால் உண்மை என்னவெனில், வாயானது ஆசீர்வாதத்திற்கும், அழிவிற்கும் பயன்படுத்தலாம். என் வாழ்வில் மட்டுமின்றி, மற்றவரின் வாழ்விலும் கூட இதை நான் கண்டிருக்கிறேன். நான் சொன்ன, அநேகமாக எல்லா காரியங்களும் எதிர்மறையாக இருந்த தருணம் என் வாழ்வில் இருந்தது.
ஆனால் தேவனுடைய வார்த்தையின், உருவாக்கும் வல்லமையை நான் எப்படி உபயோகிக்க வேண்டும் என்று பரிசுத்த ஆவியானவர் எனக்கு போதித்தார். என் வாழ்விலே இருந்த மலைகளைப் பற்றி பேசுவதைவிட என் மலையினிடம் எப்படி பேசுவது என்பதை கற்றுக் கொண்டேன். நான் என்ன சொல்கிறேன் என்றால், அவருடைய வார்த்தையின் உண்மையை, என்னுடைய சூழ்நிலைகளில் பொருத்திக்கொள்ள கற்றுக்கொண்டேன். நாளடைவில் நான் நேர்மறையான, நிலைத்திருக்கக்கூடிய பலனைக் காண தொடங்கினேன்.
வாய் எழுத்தாணியை போன்றும், இருதயமானது பறவையாகவும் இருக்கின்றது. ஒரு காரியத்தை நீங்கள் மீண்டும் மீண்டும் சொல்லும்போது, அது உங்களுக்குள்ளே சென்று உங்களுடையதாகி விடுகிறது. இனியும் நீங்கள் செய்ய முயலும் ஒரு காரியமாக இல்லாமல் நீங்கள் யாராக இருக்கிறீர்களோ அப்படியே மாறிவிடுகிறது.
நான் சத்துருவுக்கல்ல, தேவனுடைய வாயாகவே இருக்க விரும்புகிறேன். நான் அவருடைய சத்தியத்தை பேசி என் வாழ்க்கையை அனுபவிக்க விரும்புகிறேன்.
1 பேதுரு 3:10 சொல்கிறது, ஜீவனை விரும்பி நல்ல நாட்களே காணவேண்டுமென்று இருக்கிறவன் பொல்லாப்புக்கு தன் நாவையும் க படத்துக்கு தன் உதடுகளையும் விலகி காக்க வேண்டும். நீங்கள் உங்கள் வாழ்க்கையை அனுபவிக்க விரும்புகிறீர்களா? அப்படி என்றால் உங்கள் வாழ்க்கையில், அவருடைய காரியங்களை பேச உங்கள் வாயை உபயோகியுங்கள்!
ஜெபம்
தேவனே, என்னுடைய வாய் ஒரு வலிமையான ஆயுதம் என்று அறிந்திருக்கிறேன். அதை உமக்காகவோ அல்லது சத்துருவுக்காகவோ உபயோகிக்கலாம் என்றும் அறிந்திருக்கிறேன். என்னுடைய வாயை உம் மண்டையில் சமர்ப்பிக்கிறேன். பிறருடைய வாழ்க்கையிலும் உம்முடைய சத்தியத்தை எப்படி பேச வேண்டும் என்பதை எனக்கு காண்பியும்.