நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன். (சங்கீதம் 119:11)
நான் ஒருமுறை ஒரு நோட்டுப் புத்தகத்தில் கொஞ்சம் எழுத உட்கார்ந்த போது, “சில நிமிடங்கள் எடுத்துக்கொண்டு எனக்காகக் காத்திரு” என்று கர்த்தர் சொல்வதை உணர்ந்தேன். கொஞ்ச நேரம் காத்திருந்து விட்டு, தொலைபேசியில் பேச ஆரம்பித்தேன். ஆண்டவர் மெதுவாக, “நான் தொலைபேசியில் பேச சொல்லவில்லை; எனக்காகக் காத்திருக்கச் சொன்னேன்.” என்றார். ஏதாவது செய்ய வேண்டும் என்ற என் ஆசை அசாதாரணமானது அல்ல; பெரும்பாலான மக்களுக்கு அமைதியாக இருப்பது மற்றும் கடவுளுக்காகக் காத்திருப்பது கடினம்.
நான் அமைதியாகி, சிறிது நேரம் காத்திருந்த பிறகு, தேவதூதர்களைப் பற்றி கர்த்தர் என்னிடம் பேசத் தொடங்கினார் – நான் நிச்சயமாக எதிர்பார்க்காத ஒன்று. பல வேதாகமங்களைத் தேட அவர் என்னை வழிநடத்தினார், மேலும் தேவதூதர்களின் வல்லமை மற்றும் பிரசன்னம் பற்றிய சிறு பைபிள் படிப்பை முடித்தேன். கடவுள் செய்யும் அனைத்திற்கும் காரணங்கள் உள்ளது. மேலும் என் சார்பாக பணிபுரியும் தேவதூதர்களைப் பற்றி நான் அதிகம் அறிந்திருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார் என்று நான் நம்புகிறேன் – நான் நீண்ட காலமாக அதை யோசிக்காமல் இருந்தேன்.
கடவுள் என்னுடன் பேசுகிறார் என்பதையும், தேவதூதர்கள் பற்றிய முழு விஷயமும், என் சொந்த மனதில் தோன்றிய ஒன்றல்ல என்பதையும் நான் எப்படி உறுதியாக அறிந்தேன் என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். நான் கேட்டதில் எனக்கு நிம்மதி ஏற்பட்டது என்பதே என் பதில். நான் எனக்குள் “சரியாக” உணர்ந்தேன். என் ஆவி, அதை கர்த்தரிடமிருந்து வந்த செய்தியாக உறுதிப்படுத்தியது, நான் கேட்டது கடவுளுடைய வார்த்தையுடன் ஒத்துப்போகிறது.
வேறு சில சமயங்களில் நான் கடவுளுக்காக காத்திருந்தேன், இதேபோன்ற சத்தத்தைக் கேட்டேன், ஆனால் அது கடவுளுடையது அல்ல என்பதை உள்ளுணர்வாக அறிந்தேன். அவர் எப்பொழுது நம்மிடம் பேசுகிறார், எப்போது பேசவில்லை என்பதை நாம் அறிந்து கொள்வதற்கு, அவருடைய வார்த்தை நமக்கு பெரிதும் உதவும்.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: கடவுளுடைய வார்த்தையைப் படிக்கவும், அவருடைய சத்தத்தை நீங்கள் அடையாளம் காணவும் முடியும்.