தேவனுடைய வார்த்தையாகிய ‘திட ஆதாரத்தை’ உட்கொள்ளுதல்

“பலமான ஆகாரமானது நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சிசெய்யும் ஞானேந்திரியங்களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கே தகும்.” – எபிரேயர் 5:14

நான் என் குழந்தைகளுக்கு உணவு ஊட்டியதை நினைவு கூறுகிறேன்.  அவர்களுக்கு நான் வாழைப்பழத்தையும், மாம்பழம் பழத்தையும் கொடுத்து கொண்டிருந்த வரை எல்லாமே மிகவும் நன்றாக இருந்தது.  ஆனால் எப்போ ஒரு  வாயில் போட்ட உடனே தொப்பை  தொடங்க.  நான் அதை அவர் வாயிலிருந்து வழிந்து மீண்டும் வாய்க்குள் போடுவேன்.  அதற்கு கொஞ்ச நேரம் பிடித்ததுதான்.  ஆனால் சீக்கிரத்தில் அவர்கள் பட்டாணியை உண்டனர்.

இப்படி  தான் குழந்தை கிறிஸ்தவர்களும். நாம் தேவனுடைய வார்த்தையை உட்கொள்ளும்போது ஆவிக்குறிய ரீதியாக வளர்கிறோம்.  நாம் மாம்சத்திலே நடப்பதை நிறுத்திவிட்டு, அவர் நாம் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறாரோ அதை செய்ய தொடங்குவோம்.

நீதி 4:18 சொல்கிறதாவது. நீதிமானின் பாதை தேவனுடைய வார்த்தையில் அனுதினமும் தொடரும்போது, பிரகாசமாகும் தெளிவாகவும் மாறிக்கொண்டே இருக்கிறது. இங்கே முக்கிய வார்த்தை ‘தொடர்வது’. நாம் தொடர்ந்து தேவனுடைய வார்த்தையை நேசிக்க வேண்டும்.  வார்த்தையை படிக்க வேண்டும்;  வார்த்தை நம்மை மாற்ற அதை நாம் கவனிக்க வேண்டும்.

மஞ்சள் விளக்கு எரியும்போது காரை ஓட்டி கடக்க முயன்று இருக்கிறீர்களா?  ஒருவேளை நீங்கள் அவசரமாக செல்கிறீர்கள். எனவே இந்தமுறை எப்படியோ கடந்துவிடலாம் என்று எண்ணுகிறீர்கள். அப்படியாக மீண்டும் மீண்டும் செய்வீர்கள் என்றால் நீங்கள் விபத்துக்குள்ளாக நேரிடலாம்.  இப்படித்தான் தேவனுடைய வார்த்தையும்.

நான் செய்யக்கூடாது என்று அறிந்ததை துணிந்து செய்து தப்பிக்கொள்ள பார்க்கும் போது மாட்டிக் கொள்கிறோம்.  தேவனுடைய வார்த்தை நம்மை காக்கும்படிக்கு இருக்கிறது.

எபி 5:14 சொல்கிறது, திட ஆதாரமானது முதிர்ச்சியடைந்தவர்களுக்கு உரியது.  பயிற்சியினால் சரியானவற்றிற்கும், தவறானவர்றிற்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்து கொள்ளும் திறன் பெற்றவர்கள்.

‘வார்த்தையின் திட உணவானது உங்களை உணர்த்தும்; அது நேர்மையானது; அது பரிசுத்த ஆவியானவர், உங்களிடம் உள்ள மனப்பான்மை நாற்றம் எடுக்கிறது அல்லது தவறு செய்கிறது என்று உணர்த்துவதாகும்.

வாழ்க்கையை சரியானபடி வாழ வார்த்தையை உட்கொள்வது தான் வழியாகும். ஆக ஒரு குழந்தையாக இராமல் திட உணவாகிய வார்த்தையை உட்கொள்ளுங்கள்!

ஜெபம்

தேவனே,  உம் வார்த்தை மட்டுமே முதிர்ச்சி அடைவதற்கான ஒரே வழி.  உம்முடைய வார்த்தையாகிய திட உணவை உட்கொள்கையிலே நான் வளர்ச்சியடைய என்னை நடத்தும்.  எனக்கு உதவும் (கிறிஸ்துவுக்குள் நான் எப்படி இருக்க வேண்டும் என்று என்னை சிருஷ்டித்தாரோ அப்படியாக நான் மாற)

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon