தேவனுடைய வார்த்தையிலே வல்லமை இருக்கிறது

தேவனுடைய வார்த்தையிலே வல்லமை இருக்கிறது

“அவைகள் உன் கண்களை விட்டுப்பிரியாதிருப்பதாக; அவைகளை உன் இருதயத்துக்குள்ளே காத்துக்கொள். அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் ஜீவனும், அவர்கள் உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம்.” – நீதி 4:21-22

வேதம் ஒரு சாதாரண புத்தகம் அல்ல. அதன் பக்கங்களில் உள்ள வார்த்தைகள், உங்கள் ஆத்துமாவிற்கு மருந்து போன்றவை. அதற்கு உங்கள் வாழ்க்கையையே மாற்றும் வல்லமை இருக்கிறது. ஏனென்றால் வார்த்தையில் ஜீவனிருக்கிறது!

கடவுளுடைய வார்த்தையின் வல்லமையையும், உண்மையையும் நீங்கள் கண்டறியும்போது, இந்த சத்தியத்தால் உங்கள் வாழ்க்கையில் மாற்றங்களை காணத் தொடங்குவீர்கள். அதை இந்த சத்தியம் மட்டுமே கொண்டு வரும். உங்களுக்கு எதிராக, எதிரி கொண்டு வர முயற்சிக்கும் பொய்களை எவ்வாறு அங்கீகரிப்பது என்பதையும் நீங்கள் கற்றுக்கொள்வீர்கள்.

நீங்கள் வேதத்தை இப்போது தான் படிக்கத் தொடங்கியிருப்பீர்களென்றாலோ அல்லது அதைக் கண்டு பயமுறுத்தப்பட்டாலோ, எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் படிக்க வேண்டும் அல்லது எல்லாவற்றையும் இப்போதே புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்க வேண்டாம். பொறுமையாக இருங்கள். முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் ஏதாவதொரு இடத்தில் அதை தொடர உறுதியாக இருங்கள். ஏனென்றால் ஒவ்வொரு முறையும் நீங்கள் வேதத்தைப் படித்து, அதில் கவனம் செலுத்தும்போது, நீங்கள் ஏதாவது ஒன்றை கற்றுக் கொள்கிறீர்கள்.

நீதிமொழிகள் 4:20 கூறுகிறது, என் மகனே என் வார்த்தைகளை கவனி…. இதைப் புரிந்து கொள்வது முக்கியம், ஏனென்றால் கவனிப்பது, படிப்பதை விட மேல். அப்படியென்றால் வேதத்தை தியானித்து, அதை உங்கள் மனதில் மீண்டும் மீண்டுமாக கொண்டு வருவதாகும்.

நாம் கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதற்கும், தியானிப்பதற்கும் நேரத்தை செலவிடுவதோடு, எல்லாவற்றிற்கும் மேலாக அதை ஏற்றுக்கொள்ள கற்றுக்கொள்வதால், கடவுளின் குணப்படுத்தும் வல்லமையால் நாம் நிரப்பப்படுவோம்.


ஜெபம்

கடவுளே, உங்கள் வார்த்தையின் ஜீவனைக் கொடுக்கும் வல்லமைக்காக நன்றி செலுத்துகிறேன்! நான் அதைப் படிக்கும்போது, நான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நீர் விரும்புவதை எனக்குக் கற்றுத் தாரும். உம்முடைய குணப்படுத்தும் வல்லமையை என் வாழ்க்கையில் கொண்டு வருவீராக.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon