எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள். (1 தெசலோனிக்கேயர் 5:21)
தேவனிடமிருந்து தெளிவாகக் கேட்பது மற்றும் ஏமாற்றமடைவதற்கான சாத்தியக்கூறுகளைத் தவிர்ப்பது, அவருடன் வழக்கமான நேரத்தைச் செலவிடுவதன் மூலமும், அவருடைய வார்த்தையைக் கற்றுக் கொள்வதன் மூலமும் மட்டுமே கிடைக்கிறது. தேவனுடைய வார்த்தையைப் பற்றிய அறிவு இல்லாமல் அவருடைய சத்தத்தை கேட்பது தவறானது. கடவுளுடைய எழுதப்பட்ட வார்த்தையை அறிவது நம்மை ஏமாற்றத்திலிருந்து பாதுகாக்கிறது.
தேவனுடைய வார்த்தையை அறியாமல், அவரிடமிருந்து கேட்க முயற்சிப்பது பொறுப்பற்றது மற்றும் ஆபத்தானது. ஆவியானவரால் வழிநடத்தப்பட விரும்புகிறார்கள், ஆனால் வார்த்தையிலும், ஜெபத்திலும் நேரத்தை செலவிட மிகவும் சோம்பேறிகளாக இருக்கிறார்கள், ஏனென்றால் தீய ஆவிகள், நம் காதுகளில் கிசுகிசுக்க ஆர்வமாக இருப்பதால் ஏமாற்றத்திற்கு நேராய் தங்களை இழுத்துச் செல்கிறார்கள். பிசாசு, இயேசுவிடம் சில விஷயங்களைச் சொல்ல முயற்சி செய்தான், அவர் எப்போதும் இப்படி பதிலளித்தார், “அது எழுதப்பட்டிருக்கிறது,” பின்னர் எதிரியின் பொய்களை மறுக்க வேதத்தை மேற்கோள் காட்டினார் (லூக்கா 4 ஐப் பார்க்கவும்).
சிலர் கஷ்டத்தில் இருக்கும் போதும், உதவி தேவைப்படும் போதும் தேவனைத் தேடுகிறார்கள். ஆனால் அவர்கள் கடவுளிடமிருந்து கேட்கப் பழகவில்லை என்றால், அவர்களுக்கு உண்மையிலேயே தேவைப்படும் போது அவருடைய சத்தத்தை அங்கீகரிப்பது கடினமாக இருக்கும்.
நமக்கு வரும் எந்தவொரு யோசனையையும், தூண்டுதலையும் அல்லது எண்ணத்தையும் கடவுளுடைய வார்த்தையுடன் ஒப்பிட வேண்டும். நமக்கு வார்த்தை தெரியாவிட்டால், நம் எண்ணங்களில் எழும் கோட்பாடுகள் மற்றும் வாதங்களை அளவிடுவதற்கு எதுவும் இருக்காது. எதிரி நமக்குப் புரிய வைப்பதற்காய் எடுத்துக்காட்டுக் கருத்துக்களை முன்வைக்க முடியும். எண்ணங்கள் தர்க்கரீதியானவை. அவை கடவுளிடமிருந்து வந்தவை என்று அர்த்தமல்ல. நாம் கேட்கும் காரியங்களை விரும்பலாம், ஆனால் ஏதோ ஒன்று நம்மை ஈர்க்கிறது என்பதற்காய் அது கடவுளிடமிருந்து வந்தது என்று அர்த்தமல்ல. நாம் நம் உணர்ச்சிகளில் நன்றாக உணரும் ஒன்றை நாம் கேட்கலாம், ஆனால் அது நமக்கு சமாதானத்தைத் தரவில்லை என்றால் அது கடவுளிடமிருந்து வந்த்து அல்ல. எப்பொழுதும் சமாதானத்தைப் பின்பற்றி, தேவனின் அறிவுரை நம் வாழ்வில் நடுவராக இருக்கட்டும் (கொலோசெயர் 3:15ஐப் பார்க்கவும்).
இன்று உங்களுக்கான தேவனுடைய வார்த்தை: கடவுளுடைய வார்த்தைக்கு எதிராக, நீங்கள் கேட்கும் அனைத்தையும் சோதித்துப் பாருங்கள், ஏனென்றால் அது மட்டுமே சத்தியத்தின் ஒரே தரநிலை.