“கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்.” – எபே 6:10
விசுவாசிகளுக்கென்று சாத்தான் கொண்டிருக்கும் திட்டங்களின் ஒரு பகுதி நம்மை களைப்படைய செய்வதாகும். தானியேல் 7:25 லே தீர்க்கதரிசியாகிய தானியேல் பெற்ற தரிசனத்தைப் பற்றிய தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. உன்னதமானவருடைய பக்தர்களை களைப்படைய செய்வான்…
ஆனால் நீங்கள் உற்சாகத்துடனிருக்க வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். ரோமர் 8:37, கிறிஸ்தவர்களுக்கு இந்த நற்செய்தியை கொடுக்கிறது. இவையெல்லாவற்றிலும் நாம் நம்மை நேசிக்கிறவராலே ஜெயங்கொள்ளுகிறவர்களாக இருக்கிறோம். ஜெயங்கொள்ளுகிறவர்களென்றால், பிரச்சினைகள் தொடங்குவதற்கு முன்பே யார் ஜெயிக்கப்போகிறார்கள் என்பதை அறிந்திருக்கிறோம். அது நன்றாக இருக்கிறதல்லவா?
தேவனுடைய இத்தகைய நெருக்கமான உறவை ஜெபத்தினாலும், அவருடைய வார்த்தையினாலும் கொண்டிருக்க நாம் நம் இருதயத்தில் தீர்மாணிக்க வேண்டும். அவருடைய வாக்குத்தத்தின் வல்லமையால் தொடர்ந்து பெலனடைய தீர்மாணிக்க வேண்டும். தேவனுடனான நெருக்கமானது சாத்தானை ஜெயிக்கும் உறுதியான கிறிஸ்தவர்களாக நம்மை உருவாக்குகிறது.
தேவனுடைய பெலத்திலே முற்றிலும் நம்பிக்கை கொண்டவர்களாகவும், களைத்துப் போகும் போர் வீரர்களையும், சோர்ந்து போகும் பரிசுத்தவான்களையும் உருவாக்கும் சோதனைகளைப் பற்றிய பயமின்றி வாழுங்கள். அவரிலும் அவரின் வல்லமையான பராக்கிரமத்திலும் உறுதியாக நிலைத்திருங்கள்.
ஜெபம்
தேவனே, நீர் மாத்திரமே என் பெலன். சாத்தான் என்னை ஒரு களைப்படைந்த கிறிஸ்தவனாக மாற்ற நான் அனுமதிக்காமல், உம்முடனான என்னுடைய நெருக்கத்திலே நான் உறுதியாக நிலைத்திருப்பேன்.