“இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார்.” – சங்கீதம் 48:14
இயேசு இந்த உலகத்தில் இருந்தபோது அவர் எப்போதுமே சரியானவற்றை செய்ய அறிந்திருந்தார். ஏனென்றால் அவர் தமது பிதா செய்ய பார்த்ததிலே தான் அவரும் செய்தார். அவர் நம் ஆண்டவராக, அனுதினமும் நம்மை சரியான பாதையிலே நடத்த அவரை நம்பலாம்.
சங்கீதம் 48:14 ல், நாம் மரிக்கும் வரை தேவன் நம் வழிகாட்டியாக இருக்கிறார் என்று சொல்லுகிறது. நம் வாழ்க்கையின் ஒரு பகுதியிலிருந்து, நாம் சென்றடைய வேண்டிய அடுத்த இடத்திற்கு செல்ல நமக்கு வழிகாட்டும் வழிகாட்டி ஒருவர் இருக்கிறார் என்பதை அறிந்துகொள்வது எவ்வளவு அற்புதமாக இருக்கிறது.
நானும் என் கணவரும் ஒரு புதிய இடத்தை பார்க்கும்படி செல்லும்போது ஒரு வழிகாட்டியை நியமித்துக் கொள்வோம். ஒரு சமயம் நாங்களே இடத்தை கண்டுபிடிக்கலாம் என்று தீர்மானித்தோம். ஆனால் சீக்கிரமாகவே அது முழுவதும் வீண் என்பதைக் கண்டுபிடித்தோம். அந்த நாளின் பெரும்பகுதி இடங்களை கண்டுபிடிக்க இயலாமலும் எப்படி திரும்ப வருவது என்பதை கண்டுபிடிக்க முயன்றும் செலவழித்தோம்.
நானும் டேவும் அந்த பணத்தை எப்படி செலவிட்டோமோ அப்படியாகத்தான் சில சமயங்களில் வாழ்க்கையும் நாம் வாழ்கின்றோம். நீங்கள் நோக்கமற்று அலைவதை விட ஒரு அனுபவம் வாய்ந்த வழிகாட்டியை பின்பற்றுவது எப்போதுமே சுலபமானது. நீங்கள் உங்கள் சொந்த வழியில் செல்வதற்கு பதிலாக உங்கள் பிதா செய்வதைப் பார்த்து அதை செய்யுங்கள். அவரே உங்களை வழி நடத்தட்டும். நம்மை நடத்த தேவன் தம்மை அர்ப்பணித்து இருக்கிறார். எனவே அவரைப் பின்பற்றுவது முக்கியமானது.
ஜெபம்
தேவனே, வழிகாட்டியின்றி, நோக்கமின்றி தன் சொந்த வழியிலே அலையும் பயணியை போன்று வாழ விரும்பவில்லை. நீர் மாத்திரமே நான் என்ன செய்ய வேண்டும், எப்படி வாழவேண்டும் என்பதை காட்ட வேண்டும். எனவே அனுதினமும் உம்முடைய வழிநடத்துதலைப் பின்பற்ற தெரிந்து கொள்கிறேன்.