“நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.” – எபிரேயர் 13:5
நம்மில் எத்தனை பேர் உண்மையாகவே ‘நான் யாரைப் பார்த்தும் பொறாமை படவில்லை அல்லது பிறர் வைத்திருக்கும் பொருளைப் பார்த்து பொறாமைப் பட்டதில்லை. தேவன் அவர்களுக்கு கொடுத்திருப்பார் என்றால் பின்னர் அவர்கள் அதை அனுபவிக்க விரும்புகிறேன்’ என்று சொல்ல முடியும்.
வசனம் சொல்கிறது, உங்கள் நடத்தை பொருளாசை இல்லாமல் இருப்பதாக. உங்களுக்கு இருக்கும் பொருளில் திருப்தியாய் இருங்கள் (எபிரேயர் 13:5). நாம் இந்த வசனத்தின் பிரகாரம் வாழ்கிறோமா என்று தேவன் நம்மை சோதிக்கிறார் என்று நான் நம்புகிறேன்.
நாம் எப்படி பிரதிக்கிரியை செய்கிறோம் என்பதைப் பார்க்க, நாம் என்ன விரும்புகிறோமோ அதையே பெற்றுக் கொண்டிருக்கும் ஒருவரை தேவன் நமக்கு முன்பாக வாழும்படி செய்யும் சமயங்கள் இருக்கிறது. நாம் அவருடைய, ‘நீ ஆசீர்வதிக்கப்பட்டதற்காக நான் சந்தோஷப்படுகிறேன்’ என்ற இந்த பரிட்சையில் தேர்ச்சி பெறும் வரை, இப்போது நாம் என்ன கொண்டிருக்கிறோமோ அதைவிட அதிகமானதை நாம் ஒருபோதும் பெற்றுக் கொள்ளவே மாட்டோம்.
நீங்கள் தேவனிடம் ஏதோ ஒன்றை கேட்டும், அவர்களுக்கு இன்னும் கொடுத்திருக்காவிட்டால், அவர் அதை உங்களுக்கு கொடுக்க மாட்டார் என்று இல்லை என்பதில் உறுதியாய் இருங்கள். நீங்கள் உங்கள் பொறாமையை விட்டு விட்டு அவரையே உங்கள் முன்னுரிமையாக கொண்டிருக்கிறீர்களா என்பதை அவர் உறுதிப்படுத்த விரும்புகிறார்.
நாம் எல்லா வழியிலும் செழித்து இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். மக்கள் அவரது நன்மையானவற்றை பார்த்து, அவர் நம்மை எப்படி பராமரிக்கிறார் என்பதை அவர்கள் பார்க்க விரும்புகிறார். ஆனால் நாம் அவருடைய ஆசீர்வாதங்களுக்கு மேலாக அவரை அதிகமாக விரும்ப வேண்டும்.
ஜெபம்
தேவனே, என் வாழ்விலே பொறாமைக்கும், பொருளாசைக்கும் அடிமைப்பட்டு இருக்கும் பகுதிகளை எனக்கும் காண்பித்து என் முன்னுரிமைகளை மாற்றியமைக்க எனக்கு உதவும். உம்முடைய ஆசீர்வாதங்களுக்கு மேலாக உம்மை நான் விரும்புகிறேன்.