
“சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்; யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர்.” – சங்கீதம் 46:11
பாதுகாப்பின்மை என்ற தொற்று நோயானது இன்று நம் சமுதாயத்தில் இருக்கும் அனைவரின் சந்தோசத்தை திருடி அவர்களின் உறவில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. பாதுகாப்பின்மை நம் வாழ்வில் கொண்டிருக்கும் தாக்கம் எனக்கு தெரிந்து இருக்கிறது. ஏனென்றால் அதை நான் அனுபவித்திருக்கிறேன். அது ஒருவருக்கு என்ன செய்யக் கூடும் என்பதை அறிந்திருக்கிறேன்.
பாதுகாப்பை உணராதவர்கள், தாங்கள் புறக்கணிக்கப்பட்டதாக உணரும் உணர்வையும், தாழ்ந்த சுய மதிப்பையும் மேற்கொள்ள மற்றவர்களின் அங்கீகாரத்தை தேடுவார்கள்.
நாம் பாதுகாப்பின்மையுடன் போராடிக் கொண்டிருக்கும் போது, நம்மை விடுதலையாக்கும் ஒரே ஒரு காரியம் தேவனுடைய சத்தியமே. அந்த உண்மை என்னவெனில், தேவன் இலவசமாக கொடுக்கிறதை (அன்பு, அங்கீகாரம், ஏற்றுக் கொள்ளப்படுதல், பாதுகாப்பு, தகுதி, மதிப்பு போன்றவற்றை) மனிதனிடமிருந்து பெற்றுக்கொள்ள போராட வேண்டியதில்லை.
அவரே நம்முடைய அடைக்கலம், நம் உயர்ந்த கோபுரம், நம் பெலன், நம் கஷ்ட நேரங்களில் நம் அரண், நம் மறைவிடம் (சங்கீதம் 9:9, 31:4, 32:7, 33:39, 46:11) நம் தகுதி, நம் மதிப்பு, ஏற்பு. நம் அங்கீகாரம் அவரிடம் இருந்து வருகிறது. இதை நாம் பெற்றிருக்கும் வரை உலகிலேயே மிகவும் விலைமதிக்கதை நாம் பெற்றிருக்கிறோம்.
அவரை நீங்கள் நோக்கி பார்க்கையிலே ஒரு புதிய அளவிலான விடுதலையால் உணர்த்தப்பட்டு, அதிக மன உறுதி உள்ளவர்களாய், எவ்வளவு முதிர்ச்சி அடைந்தவர்களாக இருக்க சிருஷ்டிக்கப்பட்டீர்களோ அவ்வளவாக மாறிவிடுவீர்கள்.
ஜெபம்
தேவனே, பாதுகாப்புக்காக நான் உம்மை நோக்கி பார்க்கிறேன். நீரே என் அடைக்கலம், என் பெலன் என்ற உண்மையிலே கவனம் செலுத்துகிறேன். நீர் மட்டுமே எனக்கு அன்பையும், அங்கீகாரத்தையும் அருள்கிறீர். நான் முற்றிலுமாய் உறுதியாக இருக்கிறேன்.