
“ஆதலால், நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி,” – எபே 5:1
கிறிஸ்தவனாக இருப்பது வாரம் ஒரு முறை ஆலயத்துக்கு செல்வது மட்டுமில்லை. இயேசு நடைமுறை ரீதியாக நம்மிலே கிரியை செய்கிறதை பிறர் பார்க்கத்தக்க வகையிலே அவருடைய குணத்தை நம்முள் வளர்க்க வேண்டும்.
எபே 5:1ல், நாம் தேவனை பின்பற்றுகிறவர்கள் என்று வேதம் சொல்லுகிறது. துரதிஷ்டவசமாக சொல்வது செய்வதைவிட அதிக சுலபமானது.
பலசமயங்களில் தேவனை கொஞ்சமும் பிரதிபலிக்காத காரியங்களை நாம் செய்கிறோம். நாம் அவ்வாறு தவறும்போது சோர்ந்து போவதும், தொடராமல் விட்டு விடுவது நம்மை நாமே குற்ற படுத்திக் கொள்வதும் சுலபமாக நடைபெறுகிறது.
ஆனால் நாம் இன்றும் சென்றடையவில்லை என்பதில் அக்கறை காட்டுவதில்லை. நாம் மனிதர்கள்தான் என்று அறிந்திருக்கிறார். ஒரே நாளிலே, உடனடியாக அவரைப்போல் ஆவதில்லை என்றும் அவர் அறிந்திருக்கிறார். ஆனால் நாம் தொடர்ந்து வளர வேண்டும் என்று விரும்புகிறார்.
நாம் நம் விசுவாசத்திலே ஒரு போதும் முன் நோக்கி செல்லாமல் ஒரு தேக்கமான வாழ்க்கை வாழ உருவாக்கப்படவில்லை. அதிலே என்ன துணிச்சல் இருக்கிறது? நாம் நம் வாழ்க்கையை திரும்பிப்பார்த்து சில மாற்றங்கள் நடைபெறுவதை காண வேண்டும்.
நான் ஒரு பரிசேயனாய் இருந்தேன். நான் பரிசேயர்களின் தலைவியாய் இருந்திருப்பேன் என்று நினைக்கிறேன். நான் பக்திமானாயிருப்பதில் சிறந்தவளாக இருந்தேனேயன்றி தேவனை ‘உண்மையாக’ பின்பற்ற நான் உண்மையிலேயே எதுவும் செய்யவில்லை. ஒருசமயம் தேவன், ‘நான் தேவனை போல் இருக்க என்ன செய்கிறேன்’ என்று கேட்கச் செய்தார். நான் யாருக்காவது உதவி செய்கிறேனா? என் வாழ்க்கை மேம்படவே இதை நான் செய்கிறேனா?
நாம் கேள்வி கேட்கும் இடத்தில் இருப்பதே சிறந்த இடமாக இருக்கிறது. நாம் கிறிஸ்துவை போன்று இன்னும் அதிகமாக மாற தொடர்ந்து முயலும் இடம் அது.
அப்படி முயற்சி செய்து கொண்டிருக்கும் போது, பரிபூரணத்துவம் மற்றும் சுய ஆக்கினை என்ற வலைக்குள் மாட்டிக் கொள்ளாதீர். நாம் அனைவருமே தவறுகள் செய்கின்றோம். ஆனால் முக்கியமானது என்னவென்றால் நாம் போன்று இருக்க அனுதினமும் முயற்சி எடுக்க வேண்டும்.
ஜெபம்
தேவனே, நீர் என்னுடைய தவறுகளை பார்த்தும், இன்னும் என்னை நேசிக்கிறீர். தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழ உதவி செய்வதற்காக உமக்கு நன்றி. நான் என்னுடைய தோல்விகளால் சோர்ந்து போவதை எதிர்த்து நிற்பதோடு, மாறாமல் இருப்பதையும் மறுக்கிறேன். நான் உம்மை பின்பற்றவும், ஒவ்வொரு நாளும் உம்மை பின்பற்றவும் தெரிந்து கொள்கிறேன்.