சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். – யோவான் 16:13
இது அடிப்படையை போன்று காணப்படுகின்றது. ஆனால் தேவன் உண்மையாகவே மனிதர்களிடம் பேசுகின்றாரா என்று கேள்வி கேட்கும் அநேகர் இருக்கின்றனர் என்று நம்புகிறேன். இதைப்பற்றி எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? தேவன் எப்போதாவது உங்களிடம் பேசுவாரா என்று கேட்கின்றீர்களா? ஆம் என்ற பதிலை கேட்டு நீங்கள் மகிழ்வீர்கள். இவ்வுலகில் இயேசுவின் நாட்களின் முடிவில் தன் சீடர்களிடம் இயேசு உங்களிடம் நான் சொல்வதற்கு இன்னும் அநேக காரியங்கள் இருக்கிறது. ஆனால் அவற்றை தாங்கவும், ஏற்றுக் கொள்ளவும், விளங்கிக் கொள்ளவும் உங்களால் இயலாது. ஆனால் அவர் சத்திய ஆவியாகிய அவர் வரும்போது உங்களை சகல சத்தியத்திற்கும் நடத்துவார் (யோவான் 16:12-13).
இயேசு இந்த வார்த்தைகளை கடந்த மூன்று ஆண்டுகளாக அவரோடு இருந்தவர்களிடம் பேசினார்… ஆயினும் அவர்களுக்கு கற்பிக்க அனேக காரியங்கள் அவரிடம் இருந்தது. இது ஆச்சரியமாக இருக்கின்றது. ஏனென்றால் இயேசு என்னுடன் இரவும் பகலும் மூன்று ஆண்டுகள் இருந்திருப்பார் என்றால், அறிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் நான் கற்று இருப்பேன் என்று நினைப்பதுண்டு.
ஆனால் இயேசுவுக்கு, சொல்வதற்கு எப்போதுமே அனேக காரியங்கள் இருக்கிறது. ஏனென்றால் நாம் எப்போதுமே புதிய சூழ்நிலைகளை சந்தித்துக் கொண்டுதான் இருப்போம். அதிலேயே நம்மை வழிநடத்தி செல்ல விரும்புகிறார். அதனால் தான் நமக்கு பரிசுத்த ஆவியானவர் கொடுக்கப்பட்டு இருக்கிறார். அவரால், நாம் தேவன் பேசுவதை கேட்கலாம். அவர் நம் முன்னால் சரீரப் பிரகாரமாக நிற்காவிட்டாலும் அவர் பேசுவதை நாம் கேட்க இயலும்.
கிறிஸ்துவின் மூலமாகவும், பரிசுத்த ஆவியின் வல்லமையாலும், தேவன் உங்களிடம் தனிப்பட்ட முறையில் பேச விரும்புகிறார். அவர் உங்களுக்காக வைத்திருக்கும் நல்ல காரியங்களை பெற்றுக்கொள்ள ஒவ்வொரு அடியாக உங்களை நடத்த விரும்புகிறார். தம்மிடம் கேட்கும் அனைவருக்கும், பரிசுத்த ஆவியாகிய ஈவை பிதா கொடுக்கிறார் (லூக்கா 11:13 பார்க்கவும்) நாம் ஒவ்வொருவரும் தேவனிடமிருந்து கேட்கலாம் என்று உறுதியாக கூறுகிறேன். பரிசுத்த ஆவியானவரால் அனுதினமும் நடத்தப்படலாம் என்று உறுதியாக கூறுகிறேன். கேட்டுக் கொண்டிருக்கின்றீர்களா?
ஜெபம்
தேவனே, பரிசுத்த ஆவியால் நடத்தப்பட கேட்கின்றேன். நீர் என்னிடம் பேசிக் கொண்டிருக்கிறீர் என்றும் நம்புகிறேன். நீர் என்ன சொல்வீர் என்று அறிந்துகொள்ள விரும்புகிறேன்.