நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார். – சங்கீதம் 37:23
கிறிஸ்தவ வாழ்க்கையை ஒரு பயணத்திற்க்கு ஒப்பிடலாம். பரிசுத்த ஆவியானவரே நம் வழிகாட்டி… அனுதினமும் நம்மை நடத்துகிறார். நம் வாழ்க்கைக்கு எது சிறந்ததோ அதற்கு நேராக நம்மை நடத்துகிறார். ஒரு வெற்றிகரமான, சந்தோசமான பயணத்திற்கான வழி அவரை பின்பற்றுவதே ஆகும்.
ஆனால் தேவனை பின்பற்றுவது என்றால் என்ன? அடிப்படையிலே அப்படி என்றால் அவருக்கு கீழ் படிவதும் அவருடைய நடத்துதலை பின்பற்றுவதும், அவர் சொல்வதை செய்வதுமே ஆகும் அநேக சமயங்களில் நாம் தேவனுக்கு முன்பாக செல்கிறோம். நாம் செல்ல வேண்டிய சிறந்த வழி நமக்கு தெரியும் என்று நினைக்கிறோம். அவருடைய நேரத்தில் பொறுமையை இழக்கின்றோம். ஒரு பாதை துரிதமாக காணப்படுவதால் தவறான திசையை எடுக்கலாம். பிரச்சனை என்னவென்றால் நாம் எடுத்த பாதையிலே தொடர்ந்து செல்ல இயலாது என்பதை நாம் உணரும்போது, நாம் எங்கே இருந்து பாதை விலங்கினோமோ, அங்கேயே திரும்பி செல்லவேண்டியிருக்கும்.
நற்செய்தி என்னவென்றால் தேவன் அங்கே இருக்கிறார். நமக்கு முன் சென்று சரியான பாதையை நமக்கு காட்ட அவர் காத்துக்கொண்டிருக்கிறார்.
ஒவ்வொருவருடைய பிரயாணத்தையும் பரிபூரணமாக ஏற்கனவே திட்டமிட்டிருக்கிறார். அவர் உங்களை நேசிக்கிறார் என்றும், அவர் நல்லவர், நீதியானவர், அவரை நாம் நம்பலாம் என்றும் முழுமையாக விளங்கிக்கொள்ள வேண்டும்.
நம்மை சரியான திசையிலே வழிநடத்த நாம் அவரை நம்பலாம். நாம் பாதை மாறி செல்லும்போதும் அவர் நம்மை திருத்தவும், சரியான பாதைக்கு நம்மை மீண்டுமாக நடத்தவும் நம்பலாம். நம் வழியில் இருக்கும் பிற காரியங்களுக்காகவும் அவரை நம்பலாம். நம் வாழ்க்கையை அவரிடம் கொடுத்துவிட்டு அவரை நம்பலாம்.
பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலைப் பின்பற்றுங்கள். ஏனென்றால் அவருக்கு பாதை தெரியும். உங்களுடன் எப்போதுமே தங்கியிருப்பார். உங்கள் வாழ்க்கைக்கு என்று அவர் நீங்கள் பிறப்பதற்கு முன்பாகவே திட்டம் பண்ணி வைத்திருக்கும் அனைத்து காரியங்களுக்குள்ளும் அவர் உங்களை நடத்திச் செல்ல அவரை நம்புங்கள். பிரயாணத்தை சந்தோஷமாக அனுபவியுங்கள்.
ஜெபம்
தேவனே, நீர் தேவ பக்தி உள்ளவர்களின் பாதையை நடத்துகிறார் என்று உம் வார்த்தை சொல்லுகிறது. நீர் எனக்காக கொண்டிருக்கும் பிரயாணத்தில் நீர் என்னை நடத்தும். நான் பாதை மாறி போகும்போது அதை அறிந்துகொள்ள நீர் எனக்கு உதவுவீர் என்று நம்புகிறேன். நான் மீண்டும் தொடர்ந்து செல்ல நீர் எப்போதுமே என்னுடன் இருக்கிறீர்.