தேவன் உங்களை அங்கீகரிக்கிறார்

 “கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர் என்பதே.” – எண்ணாகமம் 6:24-26

நாம் மக்களைப்பற்றி நேர்மறையான வார்த்தைகளை பேச வேண்டும்.  நாம் எண்ணாகமம் 6:24-26ல்  இருக்கும் இந்த ஆசீர்வாதத்தை உயிர்ப்பிக்க வேண்டும். தேவன் உங்களை ஆசீர்வதித்து,  காத்து,  பாதுகாப்பாராக.  கர்த்தர் தம்முடைய முகத்தை உங்கள் மீது பிரகாசிக்க செய்து உங்கள் மேல் கிருபையாய் இருக்க கடவர்.  உங்கள் மேல் பிரசன்னமாகி உங்களுக்கு சமாதானம் கட்டளையிடக்கடவாராக.

வேறு வார்த்தைகளில், தேவன் உங்களை பார்த்து புன்னகைத்துக் கொண்டிருக்கிறார். அவர் உங்களை நேசிக்கிறார்! இதை எதுவும் உங்களிடமிருந்து பிடுங்கி போடாதபடி உங்கள் இருதயத்திலே வேரூன்ற செய்ய வேண்டும்.

நீங்கள் தேவனுடைய அன்பிலே ஊற்றப்பட்டு இருக்கும் போது,  அவர் நீங்கள் விசுவாசத்திலே நின்று கீழ்படிதலிலே நடக்க உதவி செய்வார். ஆனால் நீங்கள் அவருக்கு முன் சென்று நீங்களாக நல்ல காரியங்களை செய்ய முயற்சிக்க கூடாது. நீங்கள் கிறிஸ்துவுக்குள் யாராக இருக்கின்றீர்கள் என்பதை அறிந்துகொள்ள தேவனுடைய வார்த்தையை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.

சங்கீதம் 18:19லே  தாவீது ‘தேவன் என் மேல் பிரியமாயிருக்கிறார்’  என்கிறார். தாவீது பரிபூரணமாக இருக்கவில்லை. ஆனால் தேவன் அவன்மேல் பிரியமாய் இருந்தார் என்று அறிந்திருந்தான். தேவன் உங்கள் மேலும் பிரியமாயிருக்கிறார். இந்த உண்மையை உங்கள் இருதயத்தின் ஆழத்திலே பதிவு செய்யுங்கள். அவர் உங்களைப் பார்த்து களிகூறுகிறார்.  உங்களை மிகவும் அதிகமாக நேசிக்கிறார்.  தேவன் உங்களை அங்கீகரிக்கிறார்!

ஜெபம்

தேவனே என்னை நேசித்து அங்கீகரிப்பதற்காக உமக்கு நன்றி.  என்மேல் களி கூறுவதற்காக நன்றி. உம் அன்பு என் வாழ்க்கையை மாற்றிவிட்டது.  நான் உம்மிலே வளரும்போது அதுவும் தொடர்ந்து நிலைக்கும் என்று அறிந்திருக்கிறேன்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon