அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார். (சங்கீதம் 23:3)
என் வாழ்க்கையில் ஒரு காலகட்டத்தில், நான் விரும்பாத எதையும் ஏற்றுக் கொள்ளவில்லை, ஏனென்றால் அது பிசாசிடமிருந்து வந்திருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். அதைக் கொடுப்பவர் முற்றிலும் தன் முயற்சியை விட்டு விடும் வரை நான் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் நான் ஏற்றுக் கொள்ளாமலிருப்பது கடவுளிடமிருந்து வந்தவை என்பதை நான் பிறகு கண்டுபிடித்தேன். நான் விரும்பாத அல்லது தேவையில்லை என்று நினைத்த பல விஷயங்கள் என் வளர்ச்சிக்கு தேவன் அனுமதித்த விஷயங்கள் என்று பின்னர் கண்டு கொண்டேன்.
எபிரேய நிருபத்தை எழுதியவர், நாம் தேவனுடைய ஒழுக்கத்திற்கு அடிபணிய வேண்டும் என்று கூறுகிறார். அவர் நம்மை நேசிப்பதால்தான் நம்மைத் தண்டிக்கிறார். உங்கள் நன்மைக்காக, தேவன் பயன்படுத்த விரும்புவதை எதிர்க்க முயற்சிக்காதீர்கள். உங்களில் ஆழமான மற்றும் முழுமையாக கிரியை செய்யும்படி அவரிடம் கேளுங்கள், அதனால் நீங்கள் அவர் விரும்பும் அனைத்துமாக இருக்கவும், அவர் விரும்பும் அனைத்தையும் நீங்கள் செய்யவும், பெறவும் முடியும். வலி அல்லது கடினமான எதையும் நான் எதிர்த்த ஆண்டுகளில், நான் ஆவிக்குறிய வாழ்க்கையில் வளரவில்லை என்பது ஒரு எளிய உண்மை. நான் அதே பழைய மலையை (பிரச்சினைகள்) சுற்றிச் சுற்றி வந்தேன். இறுதியாக, நான் வலியைத் தவிர்க்க முயற்சிக்கிறேன் என்பதை உணர்ந்தேன். ஆனால் அப்போதும் எனக்கு வலி இருந்தது. மாறும் போது ஏற்படும் வலியை விட, நாம் இருக்கும் நிலையில் இருப்பதன் வலி மிக மோசமானது.
நமது ஆளுமை, ஆத்துமா (மனம், விருப்பம் மற்றும் உணர்ச்சிகள்), பெரும்பாலும் இந்த உலகில் நமக்கு வரும் அனுபவங்களால் காயப்படுத்தப்படுகிறது. நமக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியானவரின் செயலுக்கு நாம் ஒத்துழைத்தால், நம்முடைய ஆத்துமாவை மீட்டெடுப்பதாக தேவன் உறுதியளிக்கிறார். நான் ஒரு உடைந்து போன ஆத்துமாவைக் கொண்டிருந்தேன், அது சமாதானமோ, மகிழ்ச்சியோ இல்லாத ஒன்று, ஆனால் கடவுள் என்னை முழுமையடையச் செய்தார், அவர் உங்களுக்கும் அதையே செய்ய விரும்புகிறார்.
இன்று உங்களுக்கான கடவுளின் வார்த்தை: உங்கள் ஆத்துமாவை கடவுளிடம் திறந்து, ஒவ்வொரு காயத்தையும் குணப்படுத்தும்படி அவரிடம் கேளுங்கள்.