“கர்த்தர் உங்கள் இருதயங்களை தேவனைப்பற்றும் அன்புக்கும் கிறிஸ்துவின் பொறுமைக்கும் நேராய் நடத்துவாராக.” – 2 தெச 3:5
உங்கள் வாழ்க்கையை பல வண்ண கயிறுகளால் பின்னியிருப்பதைப் போன்று கற்பனை செய்து பாருங்கள். ஒவ்வொரு முடிச்சும் ஒரு சிக்கலைக் குறிக்கிறது, மேலும் அந்த முடிச்சுகளை அவிழ்த்து, சிக்கல்களை நேராக்குவதற்கு நேரம் மற்றும் முயற்சி தேவைப்படும். அந்த முடிச்சுகள் அனைத்தும் விழுவதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொண்டிருக்கலாம், ஆனால் அவை அனைத்தையும் நேராக்க சிறிது காலம் எடுக்கும்.
நமது நவீன, உடனடி சமுதாயத்தில், நாம் ஒரு விஷயத்திலிருந்து இன்னொரு விஷயத்திற்குத் தாவிக் கொண்டிருக்கிறோம். ஆனால் தேவன் ஒருபோதும் அவசரப்படுவதில்லை. அவர்
ஒருபோதும் பொறுமையிலிருந்து விலகுவதில்லை. ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி அவர் நம்முடன் கிரியை செய்வார். பின்னர் இளைப்பாற செய்வார் – மிக நீண்ட காலம் அல்ல.. விரைவில் அவர் திரும்பி வந்து வேறு ஒரு காரியத்தை செய்யத் தொடங்குவார். நம்முடைய முடிச்சுகள் அனைத்தும் ஒவ்வொன்றாக அவிழ்க்கப்படும் வரை அவர் அதை தொடருவார்.
நீங்கள் எந்த முன்னேற்றமும் அடையவில்லை என்று சில நேரங்களில் தோன்றினால், அதற்கு காரணம், தேவன் உங்கள் முடிச்சுகளை ஒவ்வொன்றாக அவிழ்க்கிறதாலே. அவருடைய பொறுமை உங்களிடையே வளரட்டும். விரைவில் உங்கள் வாழ்க்கையில் வெற்றியைக் காண்பீர்கள், நீண்ட காலமாக நீங்கள் விரும்பிய சுதந்திரத்தை அனுபவிப்பீர்கள்.
ஜெபம்
தேவனே, நீர் என் வாழ்க்கையில் உள்ள முடிச்சுகள் அனைத்தையும் அவிழ்த்து என் வாழ்க்கையை நேராக்க முடியும் என்பதற்காய் நான் மகிழ்ச்சியடைகிறேன். நீர் என் வாழ்க்கையில் தொடர்ந்து கிரியை செய்யும் போது பொறுமையையும், உறுதியையும் வளர்த்துக் கொள்ள எனக்கு உதவுவீராக.