
“விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத்தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.” – எபி 11:6
என் குழந்தை பருவத்தில் நான் கடுமையாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டேன். என் வாழ்க்கை பயங்கரமானது! நான் என் இருபதுகளில் அடி எடுத்து வைக்கும் வரை மகிழ்ச்சியாக இருந்தது, எனக்கு நினைவில் இல்லை. என் மனம் ஒரு குழப்பமாக இருந்தது, என் உணர்ச்சிகளிள் ஒரு குழப்பம் இருந்தது… எல்லாம் ஒரே குழப்பமாக இருந்தது!
ஆனால் கடவுளுக்கு நன்றி, நான் அப்படியாக நிலைத்திருக்கவில்லை! கடவுள் என்னில் கிரியை செய்து, என்னை மாற்றினார். எல்லாவற்றையும் கடந்து வரும் படி செய்து விட்டார். இப்போது கடவுளோடு ஒரு நல்ல உறவு இருக்கிறது. உண்மையான சமாதானம் மற்றும் மகிழ்ச்சி, குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் நல்ல உறவு இருக்கிறது. என்னை செய்யும் படி கடவுள் என்னை அழைத்ததை நான் செய்கிறேன்.
எபிரெயர் 11:6 சொல்கிறது, தம்மை ஜாக்கிரதையுடன் தேடுபவர்களுக்கு தேவன் பலன் அளிக்கிறார் என்று. கடவுளோடு நெருங்கி வரவும், அவருக்குக் கீழ்ப்படிவதற்காக, நான் தியாகம் செய்த எதையும் அவரிடமிருந்து பலமடங்காக பெற்றுக் கொள்கிறேன் என்பதை கண்டு பிடித்தேன். அவர் எனக்குக் கொடுத்தது நான் கொடுத்ததை விட, எப்போதும் மிகச் சிறப்பாக இருக்கிறது.
ஆனால் ஜாய்ஸ், நான் என்ன அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியாது. இது மிகவும் கடினம் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம்!
எனக்கு புரிகிறது – நானும், மிகவும் கடினமான சில விஷயங்களை சந்தித்திருக்கிறேன்.. ஆனால், தேவனைத் தேடுகிறவர்களுக்கு அவர் பெலன் அளிப்பார். உறுதியாக இருங்கள்.
உங்கள் கஷ்டங்களுக்கு மத்தியில் அவரைத் தேட தீர்மாணியுங்கள். உங்கள் கஷ்டங்களையும், குழப்பங்களையும் சரிப்படுத்த அவர் வல்லவராக இருக்கிறார்!
ஜெபம்
தேவனே, என் குழப்பங்களை உம்மால் சுத்தம் செய்ய இயலும் என்று நான் நம்புகிறேன். என் கஷ்டங்களில் சிக்கித் தவிப்பதற்குப் பதிலாக, இன்று உம்மை ஆவலுடன் தேடுகிறேன், நீர் என்னில் ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.