கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள். (சங்கீதம் 105:4)
யூதாவைத் தாக்க பெரும் படைகள் குவிந்திருப்பதை யோசபாத் ராஜா கேள்விப்பட்டபோது, என்ன செய்வது என்று அவருக்குத் தெரிந்திருந்தது. அவர் மக்களின் ஆலோசனையை நாடாமல், தேவனைத் தேடவும், அவரிடமிருந்து நேரடியாகக் கேட்கவும் தன்னை தயார் செய்து கொண்டார்.
சந்தேகமே இல்லை, யோசபாத் இதற்கு முன் பல போர்களில் ஈடுபட்டிருந்தார், ஆனால் முந்தைய சூழ்நிலைகளில் அவர் கையாண்ட அதே முறைகளை ஏன் அவரால் பயன்படுத்த முடியவில்லை? கடந்த காலத்தில் ஏதாவது ஒன்று, பல முறை வேலை செய்திருந்தாலும், ஆண்டவர் அதை புதிதாக அபிஷேகம் செய்யாவிட்டால், அவை தற்போதைய நெருக்கடியைத் தீர்க்க செயல்படாது. அவர் ஒரு பழைய முறையை அபிஷேகம் செய்து, அதன் மூலம் கிரியை செய்யத் தேர்ந்தெடுக்கலாம், ஆனால் அதே சமயம் அவர் நமக்கு புத்தம் புதிய திசையையும், நாம் இதுவரை கேட்டிராத அறிவுரைகளையும் வழங்கலாம். நாம் எப்போதும் ஆண்டவரையே நோக்கிப் பார்க்க வேண்டும், கடந்த காலத்தில் செயல்பட்ட முறைகள், சூத்திரங்கள் அல்லது வழிகளை அல்ல. நமது கவனம், நமது பலம் மற்றும் வாழ்க்கையின் ஆதாரம், கடவுளாய் மட்டுமே இருக்க வேண்டும்.
யோசபாத்துக்குத் தெரியும், கடவுளிடமிருந்து கேட்காவிட்டால், அதைச் நடக்கப் போவதில்லை என்று. தேவனுடைய சத்தத்தைக் கேட்க வேண்டியதன் அவசியத்தை “இன்றியமையாத தேவை” என்று வேதம் நமக்கு சொல்லுகிறது. போர் என்பது, ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்காமல் செய்ய முடியாத ஒன்றாய் இருந்தது; அது அவருக்கு முக்கியமானது. அது அவருடைய வாழ்க்கைக்கும், அவருடைய மக்களின் வாழ்வுக்கும் இன்றியமையாததாக இருந்தது.
யோசபாத்தைப் போன்ற ஒரு சூழ்நிலையில் நீங்கள் இருக்கலாம். உங்களுக்கும் தேவனிடமிருந்து ஒரு புதிய வார்த்தை தேவைப்படலாம். நீரில் மூழ்கும் ஒரு ஆண் அல்லது பெண்னைப் போல, நீங்கள் கடைசி முறையாக கீழே போவதைப் போல் நீங்கள் உணரலாம். உயிர் பிழைப்பதற்காக கடவுளிடமிருந்து ஒரு பிரத்தியேக வார்த்தையை கேட்பதற்காய் நீங்கள் ஆசைப்படலாம்.
நீங்கள் அவரிடமிருந்து கேட்க விரும்புவதை விட, தேவன் உங்களிடம் பேச விரும்புகிறார். உங்கள் நேரத்தையும், கவனத்தையும் அவருக்குக் கொடுப்பதன் மூலம் அவரைத் தேடுங்கள், நீங்கள் ஏமாற்றமடைய மாட்டீர்கள்.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: இன்று கடவுளிடமிருந்து ஒரு புதிய வார்த்தையை கேட்பதற்காய் திறந்த மனதுடன் காத்திருங்கள்.