“பிலதெல்பியா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: பரிசுத்தமுள்ளவரும், சத்தியமுள்ளவரும், தாவீதின் திறவுகோலை உடையவரும், ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர் சொல்லுகிறதாவது.” – வெளி 3:7
தேவனிடமிருந்து நாம் தெளிவாக கேட்டுக் கொண்டிருக்கிறோம் என்று அறிய வேண்டிய இக்கட்டான காலத்தில் இருக்கிறோம். நம் உணர்ச்சிபூர்வமான பகுத்தறிதலிலிருந்து அவரது சத்தத்தை அறிந்து கொள்வது எப்போதுமே சுலபமானதில்லை. ஆனால் எவருமே அடைக்க இயலாத படி, கதவுகளை தேவனால் திறக்கவும் அடைக்கவும் இயலும் என்பதை அனுபவ ரீதியாக அறிந்திருக்கிறேன்.
என் வாழ்விலே நான் செய்ய விரும்பினதை நான் செய்ய முயன்று பல ஆண்டுகளை செலவழித்தேன். அதன் முடிவு விரக்தியும் ஏமாற்றமுமேயாகும். ஆனால் தேவனை நாம் சார்ந்திருக்கும் போது அவர் நமக்கு தயவைக் கட்டளையிடுவார். நாம் அவரையும் அவருடைய பூரண நேரத்தையும் நாடுகையிலே, காரியங்களை நமக்கு எளிமையாக்கி விடுவார். அவர் ஒரு சமயத்தில் ஒரு அடியாக நம்மை நடத்துகிறார். தவறான திசையிலே நீங்கள் ஒரு அடியை எடுத்து வைப்பீர்களென்றால், நீங்கள் அதிலே நெடுந்தூரம் செல்லும் முன்பே அவர் உங்களுக்கு அதை வெளிப்படுத்துவார்.
அவருடைய எண்ணங்கள் உங்களுடையதை விட மேண்மையானது என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவர் முடிவை தொடக்கத்திலிருந்தே பார்க்கிறார். அவருடைய எல்லா வழிகளும் சரியானதாகவும், உறுதியானதாகவும் இருக்கின்றன. உங்கள் வாழ்க்கைக்கு எது அர்த்தம் கொடுக்கிறது என்பதை அறிந்திருக்கிறார், அதை அவரால் நடத்த இயலும். அவருடைய சத்தத்திற்கு செவி கொடுத்தால் ஏமாற்றமடைய மாட்டீர்கள்.
ஜெபம்
தேவனே, என் வாழ்விலே நீர் சரியான கதவுகளை திறக்கவும், தவறானவைகளை அடைக்கவும் உம்மை நம்புகிறேன். எனக்கு என்ன செய்வது என்று தெரியாமலிருக்கும் போது கூட, உம்மிடமிருந்து என்னால் கேட்க முடியும் என்றும் உம்முடைய சித்தத்தை பின்பற்ற இயலும் என்ற விசுவாசம் எனக்கு இருக்கிறது.