“குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை.” – ஆப 2:3
உங்கள் இருதயத்தின் ஆசைகள் வெளிப்படும் வரை காத்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் கனவுகள் நிறைவேறுவதை தடுத்துக் கொண்டிருக்கும் பயத்திலிருந்தோ அல்லது பிற காரியங்களிலிருந்து விடுபட ஜெபித்துக் கொண்டிருக்கிறீர்களா? நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் இரட்சிப்புக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறீர்களா?. அன்றாட தேவைகளுக்காக, ஏற்பாடுகளுக்காக, தயவுக்காக, பதவி உயர்வுக்காக, கனத்திற்காக மற்றும் அவருடைய வார்த்தையில் காணப்படும் எல்லா ஆசீர்வாதங்களுக்காகவும் நீங்கள் தேவனை நம்பிக் கொண்டிருக்கிறீர்களா?
உங்கள் ஜெபங்களுக்கான பதில்களுக்காக காத்திருந்து சோர்வடைந்திருக்கிறீர்களா? நீங்கள் விரக்தியடைந்தவர்களாய், எப்போது தேவனே, எப்போது என்று கேட்டுக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியென்றால், கடவுளின் நேர பெரும்பாலும் ஒரு மர்மமானதாக இருக்கிறது என்று தெரிந்து கொள்வது முக்கியம். அவர் நம் கால அட்டவணைப்படி காரியங்களைச் செய்வதில்லை. ஆயினும் அவருடைய வார்த்தை, ஒரு நாள் கூட தாமதிக்க மாட்டேன் என்று உறுதியளிக்கிறது.
கடவுள் சரியான நேரத்தில் காரியங்களை நடக்க வைக்கிறார்! உங்கள் வேலை எப்போது என்பதைக் கண்டுபிடிப்பது அல்ல, ஆனால் மனதில் எல்லைக் கோட்டைக் கடந்து, கடவுளின் தீவிரமான, அதிரடியான ஆசீர்வாதங்களில் வாழும் வரை விட மாட்டேன் என்று தீர்மாணிப்பதே உங்கள் வேலையாகும்! மேலும் நீங்கள் இயேசுவை எவ்வளவு அதிகமாக நம்பி, அவர் மேல் உங்கள் கண்களை வைக்கும் போது, ஜீவனைப் பெற்றிருப்பீர்கள். தேவனை நம்புவது ஜீவனைக் கொண்டு வருகிறது. நம்புவது இளைப்பாறுதலைக் கொண்டு வருகிறது. எனவே எல்லாவற்றையும் கண்டுபிடிக்க முயற்சிப்பதை நிறுத்துங்கள். தேவன் உங்கள் வாழ்க்கையில் தேவனாக இருக்க அனுமதியுங்கள்.
ஜெபம்
தேவனே, நான் காத்திருப்பதில் களைத்துப் போயிருந்தாலும் கூட, உம்முடைய நேரம் சரியானது என்று அறிந்திருக்கிறேன். உம்மை நம்பவும், எனக்கான உம்முடைய திட்டத்தில் இளைப்பாறவும் எனக்கு உதவுவீராக.