“இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாகவும் நடந்துகொள்ளுவாய்.” – யோசுவா 1:8
நாம் எவ்வளவு அதிகமான நேரத்தை, தேவனுடைய வார்த்தையை தியானிக்கவும், பேசவும் செலவழிக்கிறோமோ அவ்வளவு அதிகமாக நன்மைகளை நம் அன்றாட வாழ்க்கையில் பார்ப்போம் என்றும், அவருடன் நெருங்கிய உறவைக் கொண்டிருப்போம் என்றும் தேவன் நமக்குச் சொல்கிறார். நாம் செழிப்போடும், வெற்றியோடும் இருப்போம் என்று அவர் வாக்களித்திருக்கிறார்! (யோசுவா 1:8 ஐக் காண்க)
இதற்கு நான் சாட்சியமளிக்க முடியும், ஏனென்றால் நான் என் வாழ்க்கையில் பல சோதனைகள் மற்றும் பேரழிவுகரமான காலங்களில், கடவுளுடைய வார்த்தையை நம்பி அதை அறிக்கை செய்வதின் மூலம் வெற்றி பெற்றிருக்கிறேன்.
அவருடைய வார்த்தையை நாம் சத்தமாக பேசும்போது வல்லமையான ஒன்று நடக்கிறது. இதுதான் நாம் வேண்டுமென்றே சரியான எண்ணங்களை சிந்திக்கக் கற்றுக் கொள்ளும் வழி.
குறிப்பாக வேதவசனங்களை விசுவாசத்தின் தனிப்பட்ட அறிக்கையாக்கிக் கொள்வதின் மூலம் ஏற்படுகிறது.
வசனத்தைப் படித்து அதை உங்கள் இருதயத்தில் ஏற்றுக் கொள்வது மிகவும் நல்லது, ஆனால் நீங்கள் அதை சத்தமாக அறிக்கையிடும் போது, தேவன் என்ன சொல்கிறாரோ அதோடு நீங்கள் உரையாடி அதன் வல்லமையை உங்கள் வாழ்க்கையில் கட்டவிழ்த்து விடுவீர்கள்.
கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதற்கும், தியானிப்பதற்கும், உங்கள் எண்ணங்களை அவற்றால் நிரப்பவும் நேரத்தை செலவிட நான் உங்களை ஊக்குவிக்கிறேன். ஆனால் வார்த்தையை பேசும்படியும் உங்களை உற்சாகப்படுத்துகிறேன். தேவன் சொல்வதை சொல்வதன் மூலம் உங்கள் வாழ்க்கையை மாற்றுவதற்காக உங்கள் உள்ளத்திலே தீர்மாணிக்கலாம். அவருடைய வார்த்தையை இன்று உங்கள் சூழ்நிலைகளின் மேல் பேசுங்கள்.
ஜெபம்
தேவனே, உம்முடைய வார்த்தையின் முழு வல்லமையும் என் வாழ்க்கையில் வெளிப்பட விரும்புகிறேன். உம்முடைய வார்த்தையைப் படிப்பதற்கும் சிந்திப்பதற்கும் மட்டுமல்லாமல், என் வாழ்க்கையில் அதைப் பேச நான் இன்று தேர்வு செய்கிறேன்.