
வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது. (சங்கீதம் 19:1)
தேவன் யாருக்கும் மறைப்பதில்லை. அவர் அனைத்து மனிதகுலத்திற்கும் தன்னை வெளிப்படுத்துகிறார் (ரோமர் 1:19-20 பார்க்கவும்).
அவர் தனது கைவேலை மூலம் அனைவரிடமும் பேசுகிறார், இயற்கையே அவருடைய வல்லமை மற்றும் திட்டங்களைக் காட்டுகிறது. சுற்றிப் பார்த்து, தேவன் உருவாக்கிய உலகத்தைக் கவனியுங்கள். இயற்கையின் மூலம் அவர் நமக்குச் சொல்லும் முக்கியமான விஷயம், அவர் உண்மையிலேயே இருக்கிறார் என்பதே. அவர் ஒவ்வொரு நாளும் நம்மில் இடைபட முயற்சிக்கிறார், மேலும் அவர் தன்னைப் பற்றிய குறிப்புகளை எல்லா இடங்களிலும் விட்டுச் செல்கிறார், “நான் இங்கே இருக்கிறேன்! நீங்கள் கவலைப்படவோ, பயப்படவோ தேவையில்லை. நான் இங்கே இருக்கிறேன்.”
தினமும் காலையில் சூரியன் உதித்து, மாலையில் மறையும். இரவு வானத்தில் இருளுக்கு எதிராக பிரகாசிக்க நட்சத்திரங்கள் வெளியே வருகின்றன, மேலும் கடவுள் நம்மைக் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பதை நினைவூட்டுவதற்காக பிரபஞ்சம் ஒழுங்காக உள்ளது.
சில மரங்கள் குளிர்காலத்தில் முற்றிலும் அழிந்து, ஒவ்வொரு வசந்த காலத்திலும் மீண்டும் உயிர் பெறுவதை நாம் கருத்தில் கொள்ளும்போது, நம் சூழ்நிலைகளின் காரணமாக நாம் உயிரற்றதாகவோ அல்லது நம்பிக்கையிழந்ததாகவோ உணர்ந்தாலும், கடவுள் நம் வாழ்க்கையை மீண்டும் துளிர்க்க வைப்பார் என்பதை நமக்கு நினைவுபடுத்துகிறது.
ஒரு மரத்தைப் பார்த்து, அது காற்றில் அசைவதைப் பார்த்து ரசிக்கிறேன். காய்ந்து போன இலைகள் சில சமயங்களில் கிளைகளில் சிறிது நேரம் ஒட்டிக்கொண்டிருப்பதை நான் கவனித்திருக்கிறேன், பின்னர் ஒரு பெரிய காற்று வந்து அவற்றின் மேல் வீசும் போது அது விழுந்து விடுகிறது, புதிய மொட்டுகள் செழித்து வளர இடமளிக்கிறது. தேவனுடைய ஆவியின் காற்று, நம் வாழ்வில் இனி தேவைப்படாத அனைத்தையும் அடித்துச் செல்ல வல்லமையுள்ளதாக இருக்கிறது என்பதையும், நிலைத்திருக்க வேண்டிய அனைத்தையும் அவர் பாதுகாப்பார் என்பதையும் இது எனக்கு நினைவூட்டுகிறது. அவர் புதிய வாழ்வையும், வளர்ச்சியையும் புத்துணர்ச்சியான காலங்களையும் தருவார்.
இயற்கையின் மூலம் கடவுள் எவ்வாறு பேசுகிறார் என்பதற்கான இந்த உதாரணங்களை நினைவில் வைத்து, இன்று நீங்கள் செல்லும் எல்லா இடங்களிலும் அவருடைய குறிப்புகளைத் தேடுங்கள்!
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: கடவுள் இன்று உங்களுக்காக விட்டுச் சென்ற பல குறிப்புகளில் ஒன்றைத் தேடுங்கள்.