எனக்கு மிகுந்த துக்கமும் இடைவிடாத மனவேதனையும் உண்டாயிருக்கிறது; (ரோமர் 9:1)
இன்றைய வசனத்தில், பரிசுத்த ஆவியானவரால் “தூண்டப்படுவதை” பற்றி பவுல் எழுதுகிறார். பரிசுத்த ஆவியின் இத்தகைய தூண்டுதல்கள் தேவன் நம்மிடம் பேசும் ஒரு வழியாகும்.
இதைப் பற்றி நான் நடைமுறை வழியில் சொல்லட்டும். சில சமயங்களில், கடைகளில் தொங்கிக் கொண்டிருந்து கீழே விழுந்திருக்கும் துணியை எடுப்பது போன்ற இழிவான செயலைச் செய்யும்படி கடவுள் என்னைத் தூண்டுவார். அப்படிச் செய்யச் சொன்ன அவரது சத்தம் என் செவிகளில் கேட்கவில்லை, ஆனால் உள்ளுக்குள் ஒரு உணர்வு, நான் அந்த இடத்தை விட நன்றாக இருக்கும் இடத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஆசை. கர்த்தர் என் கீழ்ப்படிதலைப் பயன்படுத்தி, அவருடைய குணத்தைப் பற்றி எனக்கு அதிகமாகக் கற்பிக்கிறார். அவர் என்னிடம் கூறினார், “வாழ்க்கையில் நீங்கள் செய்யும் அனைத்தும், விதைகளை விதைக்கும் செயலாகும், அது உங்களிடம் திரும்பும். நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதையே அறுவடை செய்வீர்கள்.” நாம் சிறப்பான விதைகளை விதைத்தால், நம் வாழ்க்கையில் சிறப்பான விஷயங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
மற்றொரு உதாரணமாக, எனக்கு நன்றாகத் தெரிந்த ஒரு பெண்ணை உற்சாகப்படுத்த, ஒரு மின்னஞ்சல் அனுப்ப பரிசுத்த ஆவியினால் – சமீபத்தில் ஏவப்பட்டேன்.நான் அவளை பல ஆண்டுகளாக அறிவேன், அப்படிப்பட்ட உந்துதலை அதற்கு முன் நான் உணர்ந்த்தில்லை, ஆனால் நான் அந்த தூண்டுதலைப் பின்பற்றினேன், அந்த குறிப்பிட்ட நேரத்தில் நான் கொடுத்த ஊக்கம், அவள் எடுக்கவிருந்த சில முடிவுகளை அவளுக்கு உறுதிப்படுத்தியது என்ற பதிலை விரைந்து பெற்றேன்.
கடவுளின் உள் தூண்டுதலால் வழிநடத்தப்படுவது ஒரு சிறந்த செயலாகும். இது ஒவ்வொரு நாளையும் உற்சாகமாகவும், புதியதாகவும் ஆக்குகிறது. கடவுளிடம் இருந்து கேட்கக் கற்றுக் கொள்வதற்கு, இந்த மென்மையான, உள் உணர்வுகளை, தூண்டுதல்களைப் பின்பற்ற நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: பரிசுத்த ஆவியின் “தூண்டுதல்கள்” எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அவற்றை உணருங்கள்.