“தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது; இந்த விஷயத்தில் மதியில்லாதவராயிருந்தீர்; ஆகையால் இதுமுதற்கொண்டு உமக்கு யுத்தங்கள் நேரிடும் என்றான்.” – 2 நாளா 16:9
தேவன், தாம் வாஞ்சையாயிருக்கும் காரியங்களைப் பற்றி வாஞ்சையாயிருப்பவர்களுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். முழுமனதோடு அவரை பின்தொடர்பவர்களுக்காக அவர் பார்த்துக் கொண்டிருக்கிறார். இழந்து போனவர்களை, ஏழைகளை, தேவையிலிருப்பவர்களை நேசிக்க அர்பணித்தவர்களுக்காக பார்த்துக் கொண்டிருக்கிறார். வேதம் நண்மை செய்யச் சொல்கிறதை செய்ய, விருப்பமுள்ளவர்களுக்காக பார்த்துக் கொண்டிருக்கிறார்.
2 நாளா 16:9 சொல்கிறதாவது, தேவனுக்கு நேராக குற்றமற்ற இருதயம் உள்ளவர்களுக்கு தம்மை வல்லவராக காட்ட எப்போதுமே அவர்களை தேடிக் கொண்டிருக்கிறார்.
அத்தகைய மக்களுள் நீங்களும் ஒருவரா? இல்லையெனில் தேவன் தேடிக் கொண்டிருக்கும் அத்தகையவராக நீங்கள் இருக்கலாம் என்று நீங்கள் அறிந்திருக்க விரும்புகிறேன். அப்படி இருக்க உங்களை உற்சாகப்படுத்துகிறேன்.
நீங்கள் தேவனை பல ஆண்டுகளாக அறிந்திருந்தாலோ அல்லது இப்போதுதான் அவருக்குள்ளே புதிய ஜீவியத்தை தொடங்கியிருந்தாலும் சரி நீங்கள் தேவனை வாஞ்சையோடு தேடி, பரிசுத்த ஆவியானவருக்கு கீழ்படிபவராக இருக்கலாமே. காயப்பட்டுக் கொண்டிருப்போரின் வாழ்விலே வித்தியாசத்தை ஏற்படுத்துபவராக இருக்கலாமே.
இன்று எழுந்திருந்து தேவன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அந்த நபராக இருப்பீர்களாக.
ஜெபம்
தேவனே, எல்லாவற்றிற்கும் மேலாக உலகத்திலே நீர் தேடிக் கொண்டிருக்கும் நபராக நான் இருக்க விரும்புகிறேன். நான் செல்ல வேண்டுமென்று நீர் விரும்பும் பாதையிலே என்னை நடத்துவீராக. பிறரை நேசிப்பவளாக உம்முடைய வார்த்தைக்கு கீழ்படிபவளாக, உம்மை உண்மையாய் அறிந்திருப்பவளாக என்னை வடிவமைப்பீராக.