“பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்.” – கொலோசெயர் 3:2
அநேக கிறிஸ்தவர்கள் அவர்கள் கஷ்டப்பட வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்று ஒரு தவறான கருத்துடனே வாழ்கின்றனர். இது ஒரு நீங்காத பாதிப்புக்குள்ளான மனப்பான்மையையே கொடுக்கின்றது.
பாடுகள் தவிர்க்க இயலாதது தான். ஆனால் நம் பாடுகளினால் தேவன் சந்தோசம் அடைகிறவரல்ல. பாடுபடும் போது ஒரு நல்ல மனப்பான்மையை நாம் கொண்டிருப்பது தேவனை பிரியப்படுத்துகிறது. நாம் வெற்றியாளர்களாக இருக்கவேண்டுமென்று அவர் விரும்புகிறார்!
எனவே நாம் ஏன் கசப்போடும், கோபத்தோடும், காயத்தோடும், மன சோர்வுடனும் இருப்பதை தெரிந்து கொள்ள வேண்டும்?
சரியான மனப்பான்மையுடன் மேற்கொள்ளக்கூடிய ஒரு நிச்சயமான வழி இருக்கிறது. உலகத்தில் இருக்கும் பொருட்களின் மேல் அல்ல, மேலானவைகளை நாடுங்கள். அதின்மேல் உங்கள் மனதை வையுங்கள். சரியான நினைவுகளால் நீங்கள் சூழப்பட்டு இருக்கவேண்டும். இல்லையென்றால் கடினமான சமயங்களில் தொடராமல் விட்டு விடுவீர்கள்.
உங்கள் மனதிலே நிர்ணயம் பண்ணிக் கொள்ளுங்கள். ஒரு பலிகடா மனப்பான்மையினின்று, ஒரு வெற்றியாளர் மனப்பான்மைக்கு வருவதென்பது துரிதமாக நடக்கும் செயல் அல்ல என்பதை நன்றாக அறிந்திருக்க வேண்டும்.
அதற்கு நேரம் எடுத்துக்கொள்ளும். ஆனால் உங்கள் அனுபவமானது உங்களை பெலவானாக்கும். உங்களைப் போன்றே போராட்டங்களை சந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்கு உதவிட, உங்களுக்கு உதவும்.
உங்கள் எதிர்காலத்தைப் பற்றி உற்சாகமடைந்து, தேவனுடன் ஒன்றிச் செல்வதென்பது உங்களை விட்டு எடுக்கப்பட இயலாத வெற்றியோடு, மறுபக்கம் வந்தடைவீர்கள் என்பதே.
ஜெபம்
தேவனே, ஒரு பாதிக்கப்பட்ட மனப்பான்மையை மேற்கொள்ள உம்முடைய உதவி எனக்கு தேவை. சரியான மனப்பான்மையை பெற்றுக்கொள்ள, மேலான காரியங்களின் மேல் என் மனதை வைக்க தெரிந்து கொள்கிறேன். உம்முடைய எண்ணங்களையும், உண்மையையும் எனக்குள் கொண்டவளாக, என்னால் மேற்கொள்ள முடியும் என்று அறிந்திருக்கிறேன்.