
நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாயிருக்கிறார்; அவருடைய அறிவு அளவில்லாதது. (சங்கீதம் 147:5)
நான் மிகவும் அருமையாக பேசுவதாக நான் நினைக்கவில்லை, மேலும் நீங்களும், உங்களின் தொடர்பு கொள்ளும் முறை மிகவும் நுட்பமானது என்று நினைக்காமல் இருக்கலாம். நான் தேவனிடம் பேசும் போது, நான் பேசும் விதத்தைப் பற்றி இனி நான் கவலைப்படுவதில்லை; என் இருதயத்தில் உள்ளதை நான் தேவனிடம் கூறுகிறேன்-அதை நான் தெளிவாகவும், எளிமையாகவும், நேராகவும் சொல்கிறேன். அப்படித்தான் என் கணவனிடமும் பேசுகிறேன்; நான் என் குழந்தைகளுடன் பேசுவதும் அப்படித்தான்; என்னுடன் பணிபுரிபவர்களுடன் நான் பேசும் விதமும் இதுதான்; அதனால் நான் தேவனிடம் பேசுவதும் அப்படித்தான், அவர் என்னுடன் பேசுகிறார். நான் அவரை ஈர்க்க முயற்சிக்கவில்லை; நான் என் இருதயத்தை அவருடன் பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறேன் – நான் நானாக இருக்கும் போது என்னால் அதைச் சிறப்பாகச் செய்ய முடியும்.
தேவன் நம்மை, இப்பொழுது நாம் எப்படி இருக்கிறோமோ அவ்வாறே படைத்துள்ளார், எனவே பாசாங்கு இல்லாமல், அவர் நம்மைக் கேட்க ஒரு குறிப்பிட்ட வழியில் அவரை அணுக வேண்டும் என்று நினைக்காமல் இருக்க வேண்டும். நாம் உண்மையாக இருக்கும் வரை, அவர் கேட்பார். நம் இருதயத்தில் உள்ளதை வெளிப்படுத்த முடியாவிட்டாலும், அது என்ன என்பதை அவர் இன்னும் கேட்டு புரிந்துகொள்கிறார். அவரை நோக்கி உயர்த்தப்பட்ட இருதயம் அவருடைய பார்வையில் விலைமதிப்பற்றது, அவர் உச்சரிக்க முடியாத வார்த்தைகளைக் கூட கேட்கிறார். சில சமயங்களில் நாம் ஜெபிக்க முடியாத அளவுக்கு காயப்பட்டிருப்போம், மேலும் நம்மால் செய்யக்கூடியது பெருமூச்சு விடுவது அல்லது புலம்புவது மட்டுமே – தேவன் அதையும் புரிந்து கொள்கிறார். நீங்கள் அவரிடம் சொல்வதையெல்லாம், தேவன் புரிந்து கொண்டு கேட்கிறார் என்பதை அறிவதன் மூலம் இன்று நீங்கள் ஆறுதலடையலாம்.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: கடவுள் நம்பகத்தன்மையை விரும்புகிறார்; நீங்கள் ஜெபிக்கும்போது நீங்களாக இருங்கள்.