“தமக்குமுன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே,” – எபே 1:4
இன்று உங்கள் நலனுக்கு முக்கியம் என்று கருதும் ஒன்றைப் பற்றி உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன். நீங்கள் தேவனுக்கு ஆச்சரியம் இல்லை. அவர் உங்களை தெரிந்து கொண்ட பொழுது எதை பெற்றுக் கொள்கிறார் என்பதை அறிந்திருந்தார். (என்னை தெரிந்து கொண்ட போது எப்படி அறிந்திருந்தாரோ, அப்படியாக).
தேவன் தமக்கென்று நம்மை தெரிந்து கொண்டாரென்று வேதம் சொல்கிறது. திடீரென்று ஒரு நாள் அப்படியே நீங்கள் தோன்றவில்லை. உங்களைப் பொறுத்துக் கொண்டு/சகித்துக் கொள்ளவும் தேவன் தீர்மாணம் கொள்ளவில்லை.
தேவன் உங்கள் தெரிந்து கொண்ட படியால், நீங்கள் அவரை தொந்தரவு செய்யக் கூடாது….அவர் மேல் நீங்கள் திணிக்கக்கூடாது. உங்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும் போது அவர் விழிபிதுங்கி செய்வதறியாது நிற்கிறதில்லை. மாறாக அவர் எப்போதுமே நீங்கள் எவ்வளவு தூரம் வந்து இருக்கிறீர்கள், எவ்வளவு நன்றாக நடந்து கொண்டிருக்கிறீர்கள், அவருடைய பார்வையிலே நீங்கள் எவ்வளவு விஷேசமானவர்கள், அவர் உங்களை எவ்வளவாக நேசிக்கிறார் என்பதை நினைவுபடுத்துகிறார்.
தேவனுக்கு ஏற்கனவே உங்களுடைய பெலவீனங்கள் தெரியும். உங்களுக்கு இருக்கும் ஒவ்வொரு குறைவையும், நீங்கள் விழும் ஒவ்வொரு முறையும் அறிந்திருக்கிறார். இருந்தாலும் நீ எனக்கு வேண்டும் என்று சொல்லுகிறார். எபே 1:5 லே அவர் உங்களை தமக்கு சொந்தமாக தத்து எடுத்துக் கொள்ள ஏற்கனவே நிர்ணயித்து விட்டார் என்று பார்க்கிறோம். தேவன் உங்களுடைய அப்பா, அவர் உங்கள் பட்சத்திலிருக்கும் போது காரியங்களெல்லாம் இறுதியில் உங்கள் நண்மைக்கே நடந்தேறும்.
ஜெபம்
தேவனே, உமது அன்பு எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. என்னுடைய தகப்பனாக இந்த உலகம் தோன்றுவதற்கு முன்பே என்னை நீர் தெரிந்து கொண்டீர். நான் எவ்வளவு குறைவுள்ளவளக இருந்தாலும் என்னை நீர் விரும்புகிறீர். உம்முடைய நண்மைக்காக நன்றி செலுத்துகிறேன்.